SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐயப்பன் அறிவோம்! சபரிமலை பயணம் - 53

2018-01-11@ 14:03:25

‘நெய் தேங்காய்’ தரும் தத்துவம்...

மாலையிட்டு, விரதமிருந்து ஐயப்பனை தரிசிக்க பயணிக்கும் பக்தரின் இருமுடியில் அவசியம் ‘நெய்’ தேங்காய் இருக்கிறது. இப்பயணத்தில் சபரிமலையில் ஐயப்ப பக்தர் கன்னிமூல  கணபதியையும், நாகரையும் தரிசிக்கிறார். திருமுற்றத்திலிருந்து இறங்கி குருசாமியுடன் இருமுடி கட்டுகளை வைத்து பூஜித்து, பூஜைப் பொருட்கள் அடங்கிய முடிச்சினைத் திறந்து நெய் தேங்காயை உடைக்கிறார். குருமார்கள் அந்த நெய்யை ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்ய வழங்குகின்றனர். அபிஷேகத்திற்கு பிறகு அந்த  நெய்யை  சுவாமியின் பிரசாதமாக பக்தர் வீட்டுக்கு எடுத்து வருகிறார். நெய் எடுக்கப்பட்ட தேங்காய் 18 படிகளின் முன் உள்ள அக்கினிக் குண்டத்தில் போடப்படுகிறது.

இந்த தேங்காய்க்குள் அடைத்து எடுத்துச் செல்கிற நெய், மிகப்பெரும் வாழ்வியல் தத்துவத்தை உணர்த்தி நிற்கிறது. அதாவது, ‘‘ஆண்டவனின் படைப்பில் மிக உன்னத நிகழ்வுகள் ஏராளம் இருக்கின்றன. அதில் மிகச் சிறந்த படைப்பாக பசு தரும் பால் இருக்கிறது. பொதுவாக பாலை கறந்து அப்படியே வைத்து விட்டால் அது கெட்டு விடும். அந்த பாலைக் காய்ச்சி, பக்குவப் படுத்தி விட்டால் அதிலிருந்து என்றுமே கெட்டுப் போகாத ‘நெய்’ கிடைக்கும். அப்படித் தான் மனிதனும் தனக்குள் இருக்கும் தீயவற்றை ஒழித்து, தன் மனதை பக்குவ நிலையை அடைய செய்ந்து விட்டால் அவனே இறைவனின் நிழலாகிறான்...’’ என்பதைக் காட்டுகிறது.

ஈசனின் முக்கண் கொண்ட முத்திரைத் தேங்காயில், கெட்டுப் போகாத தூய்மையான நெய்யை நிரப்பியதைப்போல, மனிதன் பக்குவ நிலையை அடைகிறான். இம்மனிதன் தலையில் சுமந்து வந்து, தேங்காயின் நெய்யை ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்கிறபோது தன் அன்பை நிஜப்படுத்துகிறான். அந்த நெய்யே ஜோதி சொரூபமாக காட்சியளிக்கிறது என்கிற தத்துவக் கருத்துகளையும் இந்த நெய், கூடுதலாக உணர்த்துகிறது.

(நாளையும் மலையேறுவோம்...)

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

  • singaporeasianmodi

    சிங்கப்பூரில் 13வது கிழக்காசிய உச்சி மாநாடு : பிரதமர் மோடி பங்கேற்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்