SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நலம் தரும் நட்சத்திரங்கள்!

2018-01-10@ 16:32:06

பிறைசூடிய பெருமான் போற்றி!
சுடர்வாங்கி குளிரும் கோளே போற்றி!
சந்திரா போற்றி, சோமனே போற்றி!
தட்சன் சாபத்தால் தேய்ந்து
பரமன் வரத்தால் வளர்ந்தாய் போற்றி!
பேரெழில் உருவே போற்றி! கலையே போற்றி!
கற்பனை வளமே போற்றி!
ரோகிணிப் பிரியனே போற்றி!
இருபத்தேழு நங்கையருடன்
மண்டலம் ஆள்பவனே போற்றி!
காலமே போற்றி! திங்களே போற்றி!
தமிழே போற்றி! சுந்தரனே போற்றி!
மனமாளும் மதியே போற்றி!
மாசிலா முகமே போற்றி!
கலைவாணி அருளால் மன
காரிருள் அகற்றும் அஸ்வினி போற்றி!
துர்க்கை ஆசியால் தரணி
போற்றும் பரணியே போற்றி!
அக்னி அம்சமாய் அழகு ஒளிரும்
கார்த்திகை தேவி போற்றி!
நான்முகன் படைப்பே
நற்குண ரோகிணியே போற்றி!
அமைதி, ஆனந்தம் தரும் மிருகசீரிஷமே  போற்றி!
ஈசனின் பேரன்பு திருவாதிரையே போற்றி!
அதிதியின் அருள்பெற்ற புனர்பூசமே போற்றி!
குரு அருள் திருவருள் தரும் பூசமே போற்றி!
ஆதிசேஷன் அன்பு பெற்ற ஆயில்யமே போற்றி!
சுகமான வாழ்வருளும் மகமே போற்றி!
பார்வதி தேவி கருணை வென்ற பூரமே போற்றி!
வாக்கில் வாய்மை கொண்ட உத்திரமே போற்றி!
சவிதா தேவி ஒளியான ஹஸ்தமே போற்றி!
புவனேஸ்வரி அம்சமான சித்திரையே போற்றி!
குளிர்தென்றல் மனம் கொண்ட சுவாதியே போற்றி!
ஆறுமுகன் விரும்பி அவதரித்த விசாகமே போற்றி!
திருமகள் எழிலாக வலம் வரும் அனுசமே போற்றி!
இந்திரன் அருள்பெற்ற கேட்டையே போற்றி!
அனுமன் உதித்த வீரத் திருமூலமே போற்றி!
வருணன் வாழ்த்தும் பூராடமே போற்றி!
கணபதி அருள் வென்ற உத்திராடமே போற்றி!
நாராயணன் நற்பெயர் ஈன்ற திருவோணமே போற்றி!
அஷ்டதிக்பாலகர் பணியும் அவிட்டமே போற்றி!
எமனின் அளவிலா அன்பு பெற்ற சதயமே  போற்றி!
குபேர செல்வமருளும் பூரட்டாதி போற்றி!
காமதேனுவாய் அள்ளி வழங்கும் உத்திரட்டாதி போற்றி!
சத்யமாய் விளங்கும் சனியருள் பெற்றரேவதி போற்றி!
நலம் தரும் நட்சத்திரம் வணங்கும்
பார்வதிநாதா, பாற்கடல்வாசா போற்றி! போற்றி!

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-07-2018

    22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்