SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஐயப்பன் அறிவோம்! சபரிமலை பயணம் - 52

2018-01-10@ 14:18:09

18 படிகளின் தத்துவம்...

மாலையிட்டு, விரதமிருந்து, தலையில் இருமுடி தாங்கி சபரிமலைக்கு பக்தர்கள் பயணிக்கின்றனர். இங்கு 18 படிகளைக் கடந்தே ஐயப்பனை தரிசிக்க முடிகிறது. எண்ணற்ற சிறப்புகள் மிக்க இந்த 18 படிகளும் பலதரப்பட்ட தத்துவங்களும் கொண்டிருக்கின்றன. முதல் ஐந்து படிகள் ‘பஞ்சேந்திரியங்கள்’ என்று சொல்லப்படுகின்ற மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றை குறிப்பிடுகின்றன. அடுத்த எட்டு படிகள் அதாவது ஆறாவது படி முதல் பதிமூன்றாவது படி வரை ‘அஷ்டராகங்கள்’ என்று சொல்லப்படுகின்ற காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம், அகந்தை, பொறாமை ஆகிய எட்டையும் குறிப்பிடுகின்றன.

அடுத்த மூன்று படிகள் அதாவது பதிநான்கு படி முதல் பதினாறாவது படி வரை ‘முக்குணங்கள்’ என்று சொல்லப்படுகின்ற சத்துவ குணம், ரஜோ குணம், தமோ குணம் ஆகிய மூன்றையும் குறிப்பிடுகின்றன. அடுத்த இரண்டு படிகள் அதாவது பதினேழாவது படி மற்றும் பதினெட்டாவது படி ஆகியவை கல்வி (ஞானம்), அறியாமை (அஞ்ஞானம்) ஆகியவற்றை குறிப்பிடுகின்றன. மேலே சொல்லப்பட்டவைகளை ஒருவர் உணர்ந்து புண்ணிய பாவங்களை பிரித்து அறிந்து நடப்பவரால் மட்டுமே பிறவிப் பெருங்கடலிலிருந்து விடுதலை பெற்று முக்தி அடைய முடியும் என்பதையே இந்த 18 படிகள் தத்துவ ரீதியாக உணர்த்தி நிற்கின்றன.

(நாளையும் மலையேறுவோம்...)

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • dogsketc_123amer

    பனிச்சறுக்கு விளையாடும் உலகின் முதல் நாய் : வியக்க வைத்த பென்னி !

  • thailandbirdsing

    தாய்லாந்தில் நடைபெற்ற பறவைகள் பாடும் போட்டி : ஆயிரக்கணக்கான பறவைகள் பங்கேற்பு

  • presimodhi_madhya123

    மத்தியப் பிரதேசத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் : பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு

  • bandh_inwest123

    மேற்கு வங்காளத்தில் முழு அடைப்பு போராட்டம் - பல இடங்களில் ரயில் மறியல் !

  • israel_newfasttrain

    இஸ்ரேலில் அதிவேக இரயில் திறப்பு - மக்கள் உற்சாகம் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்