SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மலைக்கோயில் ஆனந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு யாகம்

2018-01-08@ 14:44:42

பழநி: பாதயாத்திரை பக்தர்கள் நலன் வேண்டி பழநி மலைக்கோயில் ஆனந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. பழநி பால தண்டாயுதபாணி கோயில்  தைப்பூச விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக வருவர். இவ்விழா வரும் 25ம் தேதி துவங்க உள்ளது. எனினும், தற்போதே ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். இவ்வாறு வரும் பக்தர்கள் விபத்தில் சிக்காமல் பாதுகாப்புடனும் சுவாமி தரிசனம் செய்வதற்காக மலைக்கோயில் ஆனந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டது. விநாயகர் பூஜை நடத்தப்பட்டு, 9 கலசங்கள் வைத்து புண்ணியாகவாஜனம், கலச பூஜை, பாராயணம், கணபதி ஹோமம் நடத்தப்பட்டது.

தொடர்ந்து ஆனந்த விநாயகருக்கு 16 வகை அபிஷேகம் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து மூலவர் சன்னதியில் தைப்பூசத் திருவிழா அனுமதி பெறும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கண்பத் கிராண்ட ஹோட்டல் உரிமையாளர் ஹரிஹரமுத்து, செந்தில் உள்ளிட்டோர் செய்திருந்தனர். தொடர்ந்து வடக்கு கிரி வீதியில் உள்ள வீரதுர்க்கை அம்மன் கோயில், ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில், கிழக்கு கிரி வீதியில் உள்ள அழகு நாச்சியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. பூஜைக்கான ஏற்பாடுகளை பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்