SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐயப்பன் அறிவோம்! சபரிமலை பயணம் - 51

2018-01-08@ 14:23:25

18 படிகளில் பூஜை...

சபரிமலைக்கு மாலையிட்டு விரதமிருந்து இருமுடியுடன் பயணிப்போர், 18 படிகள் ஏறியே, ஐயப்பனை தரிசிக்கின்றனர்.  மகத்தான உன்னதங்கள் நிறைந்த இந்த 18 படிகளுக்கு நடத்தப்படுகிற பூஜையும் ஓர் ஆன்மிகப் பெருவிழாவாகவே இருக்கிறது. படிபூஜை நடைபெறும் நாளில் பூக்களால், விளக்குகளால் இந்த 18 படிகளும் அலங்கரிக்கப்படுகிறது. படி ஏறுமிடத்திலே பிரதான தந்திரி 18 வெள்ளி கலசங்கள் வைத்து பூஜை துவக்குகிறார். ஒவ்வொரு படியிலும் பீட, மூர்த்தி பூஜைகளும், பிறகு 18 படிகளுக்கும் ‘கலசாபிஷேகமும்’ நடத்தப்படுகிறது. நீராஞ்சன தீபம் (தேங்காயை இரண்டாக உடைத்து அதன் மூடியில் நெய் ஊற்றி ஏற்றப்படும் தீபம்) காட்டப்படுகிறது. பூஜைக்கென உபயோகிக்கும் பொருட்கள் அத்தனையும் வெள்ளியால் ஆனது.

படிகளில் விளக்குகள் வெள்ளி, பித்தளைகளால் ஆனது. நைவேத்யம் காட்டிய பின் பிரசன்ன பூஜை செய்யப்படும். தொடர்ந்து கற்பூர ஜோதி ஏற்றி, தீபாராதனை காட்டி சபரிமலை பிரதான தந்திரியும், மேல்சாந்தியும் மற்றும் சில பக்தர்களும் படியேறிச் செல்லும் காட்சி அற்புதம். இதன் பிறகு சன்னிதானத்தில் ஐயப்பனுக்கு அரவணப் பாயசம் நைவேத்யம் செய்து தீபாராதனை செய்கின்றனர். பதினெட்டு மலைகளின் தேவதைகளை வழிபாடு செய்வதற்காகவே படிபூஜை நடத்தப்படும் தத்துவம் இருக்கிறது. இந்த பதினெட்டு மலைகள் என்னவென்றால், சபரிமலை, பொன்னம்பலமேடு, கவுண்டமலை, நாகமலை, சுந்தரமலை, சிற்றம்பலமேடு, கல்கிமலை, மாதங்கமலை, மைலாடும்மலை, ஸ்ரீமாதமலை, தேவர்மலை, நீலக்கல்மலை, தலப்பாறைமலை, நீலிமலை, கரிமலை, புதுச்சேரி, அப்பாச்சிமேடு, இஞ்சிப்பாறை போன்றவையாகும்.

(நாளையும் மலையேறுவோம்...)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-06-2019

    18-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்