SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐயப்பன் அறிவோம்! சபரிமலை பயணம் - 50

2018-01-08@ 14:22:44

மனம் ஒன்றி... மந்திரங்கள் உச்சரித்து...’

ஒவ்வொரு காலத்திலும் பல்வேறு அவதாரங்கள் எடுத்தே, அதர்மம் அழித்து தர்மத்தை கடவுள் வாழ்வித்திருக்கிறார். அவ்வகையில், ஸ்ரீகிருஷ்ணர் அவதாரத்திற்கு பிறகு, மனித அவதாரம் எடுத்தது ஸ்ரீ ஐயப்பன் அவதாரமே என்கின்றனர் ஆன்மிக பெரியவர்கள். பக்தர்கள் தங்கள் ஐம்புலன்களை அடக்கி, ஏற்றத்தாழ்வின்றி செயலாற்றி, இறைவனிடம் தங்களைச் சரணடையச் செய்தலே சபரிமலைப் புனிதப்பயணத்தின் நோக்கமாக இருக்கிறது.  இத்தருணங்களில் பக்தர்கள் அருள் தரும் மந்திரங்களை மனம் கொண்டு உச்சரித்து, மகத்தான மேன்மை பெறலாம். ஒவ்வொரு ஐயப்ப பக்தரும் மந்திரம் உச்சரித்தே மாலை அணிகிறார்.

மாலை அணியும் மந்திரம் இதோ.. ‘‘ஞான முத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குரு முத்ராம் நமாம்யஹம். வன முத்ராம், சுக்த முத்ராம், குரு முத்ராம் நமாம்யஹம். சாந்த முத்ராம் சத்திய முத்ராம் வ்ருது முத்ராம் நமாம்யஹம். சபர்யாஸ்ரம சத்யேன முத்ராம் பாது ஸதாபிமே. குரு தட்சிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரிணே சரணாகத முத்ராம் தவன் முத்ராம் தாரயா யஹம். சின் முத்ராம் கேசரி முத்ராம் பத்ர முத்ராம் நமாம்யஹம். சபர்யாசல முத்ராயை நமஸ்துபயம் நமோ நம’’ என்பதாகும்.

இத்துடன், நியாயமான தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறிட ‘‘ஓங்கார பீடம் மார் விக்னம்தேவம் ஹரிஹராத்மஜம் சபரிபீட நிலையம்’’ என்கிற மந்திரத்தை தினமும் 11 முறை ஜபிப்பது பலன் தரும் என்கின்றனர். இத்துடன், ‘‘ஓம் க்ரும் நம ; பராய கோப்த்ரே நம’’...  அதாவது, ‘கலியுகத்தில் எல்லாவித ஆபத்துகளிலிருந்தும் மக்களை ரட்சிக்கும் சக்தியுள்ள கடவுள் ஐயப்பன்’  இதுவே இம்மூல மந்திரத்தின் சாரமாகும். இம்மந்திரத்தையும் தொடர்ந்து ஜபிக்கலாம்.
 மாலையிட்டு, விரதமிருந்து, 18 படிகளேறி ஐயப்பனை தரிசித்து திரும்புகிற பக்தர்கள் தங்கள் மாலையை கழற்றும்போதும் மந்திரம் அவசியம். ‘‘அபூர்வ சாலரோஹ  திவ்ய தரிசன காரியனே! சாஸ்த்ரு முத்ரோத் மகாதேவ்  தேஹமே விரத விமோசனம்’’ என்பதே மாலை கழற்றும் மந்திரம்.

(நாளையும் மலையேறுவோம்...)

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-02-2019

  22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • perufloodrain

  பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 • himachal

  இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

 • navamkolumpu

  கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்

 • araliparaijallikattu

  அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்