SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாளை சாந்திநகர் குழந்தை இயேசு ஆலய கொடியேற்று விழா

2018-01-05@ 12:45:29

நெல்லை: பாளை சாந்திநகர் குழந்தைஇயேசு ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 14ம்தேதி வரை நடக்கிறது. பாளை மறைமாவட்டம் சாந்திநகர் குழந்தை இயேசு ஆலய திருவிழா இன்று (5ம்தேதி) மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மறை மாவட்ட முன்னாள் முதன்மைக்குருவும், பெங்களூரு பேதுரு குருத்துவ கல்லூரி பேராசிரியருமான முனைவர் அருட்பணி அந்தோனி சாமி திருவிழா கொடி ஏற்றி வைக்கிறார். மறைமாவட்ட முதன்மைக்குரு முனைவர் அருட்பணி சேவியர் டெரன்ஸ் திருப்பலி நிறைவேற்றி, மறையுரை நிகழ்த்தி, நற்கருணை ஆசீர் வழங்குகிறார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 13ம்தேதி 7.45 மணிக்கு குழந்தை இயேசு திருஉருவ பவனியும், 14ம்தேதி பொங்கலன்று காலை 7.15 மணிக்கு பாளை மறை மாவட்ட ஆயர் ஜூடுபால்ராஜ் தலைமையில் கூட்டுத் திருப்பலியும் நடக்கிறது.

திருப்பலியில் சிறுவர், சிறுமிகளுக்கு புதுநன்மை வழங்கப்படுகிறது. அன்று மாலை 6 மணிக்கு கொடியிறக்கம். திருத்தல பங்குத்தந்தை விசுவாச ஆரோக்கியராஜ் தலைமையில் நடக்கிறது. மாலை 7 மணிக்கு திருவிழாவில் நடைபெற்ற விளையாட்டு மற்றும் விவிலிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை பங்குத் தந்தை தலைவர் விசுவாச ஆரோக்கியராஜ், பேரவை துணைத்தலைவர் தரர்சியுஸ், செயலர் வக்கீல் ரோஜர்ஸ், பொருளாளர் சந்தனராஜ், இணைச் செயலர் ஸ்டெல்லா கென்னடி மற்றும் பேரவை உறுப்பினர்கள், இளைஞர்கள், அன்பிய பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்