SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐயப்பன் அறிவோம்! சபரிமலை பயணம் - 48

2018-01-04@ 13:54:44

‘காந்தமலை’யில் இறைக் காட்சி...

பொன்னம்பல மேட்டில் பூதநாதனாக ஐயப்பன் காட்சியளித்தார். இவ்விடமே காந்தமலை எனப்படுகிறது. பம்பையில் இருந்து 12 மைல் தூரத்தில் இருக்கிற, மக்கள் நடமாட்டம் இல்லாத இம்மலைப்பகுதியின் உச்சியில்தான் மகரஜோதி தரிசனத்தன்று ‘மகரவிளக்கு’ ஏற்றப்படுகிறது. புலிப்பால் தேடி காட்டுக்கு வரும் ஐயப்பனை, கலியுகத்தில் தர்மம் நிலைத்திட அக்காட்டுப் பகுதியில் தவமிருந்த ஏராள முனிவர்களும் வணங்கி வரவேற்கின்றனர். ஐயப்பனிடம், ‘‘பொன்னம்பல மேடு எனும் குன்றில் தங்களுக்கென ஒரு கோயில் எழுப்பி இருக்கிறோம். அங்கு எழுந்தருளி எங்கள் அபிஷேக ஆராதனைகளை ஏற்க வேண்டும்...’’ என்று கோரிக்கை வைக்கின்றனர். முனிவர்களின் விருப்பத்தை ஏற்று கல்லிலும் முள்ளிலும் நடந்து ஐயப்பன் ‘பொன்னம்பல மேடு’ அடைகிறார். அங்கிருந்த நவரத்ன மேடையில் எழுந்தருளுகிறார். பிறகு மகிஷியை வதம் செய்து நாடு திரும்புகிறார்.

இதுஒரு புறமிருக்க, சபரிமலையில் கோயில் கொள்வதாக ஐயப்பன், பந்தள மன்னருக்கு வாக்களிக்கிறார். ஐயப்பனுக்கு கோயில் கட்டுவதற்கு சபரிமலை வந்த பந்தள மன்னரை சிவ கணத் தலைவரான வாபரன், பொன்னம்பல மேடு அழைத்துச் செல்கிறார். அங்கு கோடி சூரியனுக்கு நிகரான ஒளியுடன் பூதநாதனாக காட்சி தரும் ஐயப்பனை மன்னர் விழுந்து வணங்குகிறார். இதற்கிடையில் சபரிமலையில் ஐயப்பனுக்கு கோயில் எழுப்பினால், பொன்னம்பல மேட்டில் ஐயப்பனைக் காண முடியாதே என்ற வருத்தத்தில், சபரிமலை கோயில் பணிகளை தடுக்கும் விதமாக பந்தள மன்னருடன் போர் நடத்தப்பட்டதாம். பின்னர், ஒரு கோயிலுக்குள் அடங்கி விடுவதல்ல, இறைப் பேரருள் என்பதை உணர்ந்து இது கைவிடப்பட்டதாகவும், தேவசிற்பியான விஸ்வகர்மா, தேவதச்சர் உறுதுணையில் சபரிமலை கோயில் அமைக்கப்பட்டதாகவும் புராண வரலாறு பேசுகிறது.

நாளையும் மலையேறுவோம்...

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-04-2019

    24-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • vote

    3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது

  • hailstrom

    தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

  • bookday

    இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

  • ukraine

    உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்