SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காட்டுபாவா பள்ளிவாசலில் சந்தனக்கூடு விழா

2018-01-04@ 13:53:57

திருமயம்: திருமயம் அருகே காட்டுபாவா பள்ளிவாசலில் இந்து, முஸ்லிம் இணைந்து கொண்டாடும் சந்தனக்கூடு விழா நேற்று நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர். திருமயம் அருகே காட்டுபாவா பள்ளிவாசல் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சந்தன கூடு விழா இந்து முஸ்லிம் இணைந்து மத பாகுபாடின்றி கொண்டாடப்படும். இங்கு நடைபெறும் சந்தனக்கூடு விழா மத நல்லிணக்கத்துக்கு எடுத்துகாட்டாக விளங்குகிறது. இந்தாண்டுக்கான சந்தன கூடு விழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் 15 நாட்களுக்கு தினம்தோறும் பள்ளிவாசலில் இந்து, முஸ்லிம்கள் வழிபாடு நடத்தினர். இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழா நேற்று அதிகாலை 3 மணிக்கு நடந்தது. நல்லூர் கிராமத்தை சேர்ந்த இந்துக்கள் தங்களது முறைப்படி கல்லந்தேர் என்னும் தேரை அலங்கரித்தனர்.

அதேபோல் முஸ்லிம்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 40 அடி உயரம் கொண்ட சந்தன கூடை உருவாக்கி அதன் நடுவில் பானை நிரம்ப சந்தனம் வைத்தனர். பின்னர் கொடி மேடையிலிருந்து இந்துக்கள் கல்லந்தேரை முதலில் இழுத்து செல்ல பின்தொடர்ந்து முஸ்லிம்களின் சந்தன கூடு ஊர்வலம் நடந்தது. கல்லந்தேரானது சந்தன கூடை பாதுகாக்க முன்னே செல்வதாக பாரம்பரியமாக நம்பம்படும் ஒரு வழக்கமாகும். சந்தன கூடு ஊர்வலம் பள்ளிவாசல், கடைவீதி, பள்ளிவாசல் ஊரணி மற்றும் முக்கிய வீதிகளில் வந்து காலை 6 மணிக்கு கொடிமேடையை வந்தடைந்தது. பின்னர் சந்தனகூடு பானையில் உள்ள சந்தனத்தை எடுத்து பாவாவின் சமாதியில் பூசி வழிபாடு நடத்தினர். இந்த விழாவில் திரளானோர் பங்கேற்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-04-2018

    23-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்