SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாய்நாதர் நாமத்தின் சக்தி அவ்வளவு பிரம்மாண்டமானது

2018-01-04@ 10:01:18

ஓர் பக்தன் எவ்வளவு தூரம் நெஞ்சுரங்கொண்டவனாகவும் தீர்மானமுள்ளவனாகவும் இருக்கிறானோ, அங்ஙனமே பாபாவின் உடனடியான பிரதிச் செயலும் இருக்கிறது. அவரது முறை திரையிடப்பட்டதோ இரகசியமானதோ அல்ல. ஆனால் முற்றிலும் வெளிப்படையானவை. பாபா யோகாசனத்தையோ, பிராணாயாமத்தையோ, இந்திரியங்களைப் பலவந்தமாக அடக்குவதையோ, மந்திரத்தையோ, தந்திரத்தையோ, யந்திர பூஜையையோ, யாருக்கும் போதிக்கவோ, விதிக்கவோ இல்லை. பாபாவின்  ஓரே போதனை பொறுமை, சாயி நாமத்தை இடைவிடாமல் ஜபித்துக்கொண்டு, சங்கடங்களை தைரியமாக நேருக்கு நேராக சந்தித்தால், எல்லா ஆபத்துகளும் பறந்தோடிவிடும்.

சாயி நாமத்தின் சக்தி அவ்வளவு பிரம்மாண்டமானது. இந்த உலகில் குருவின் வாக்கு ஒன்றுதான் மனிதனை காப்பாற்ற முடியும். குருவை நம்பியவர்களுக்குக் கேட்டதெல்லாம் கிடைக்கும். யார் யார் நினைவுகள் எப்படி இருக்குமோ, பயனும் அப்படி இருக்கும். குரு சொன்ன வார்த்தையில்  நம்பிக்கை வைத்தவனுக்கு நினைத்தது நடக்கும். கள்ளம் கபடமற்ற எளிய பக்தர்களுக்காக ஸ்ரீ ஹரி மிகவும் ஏங்குகிறார். அன்பு வலையில் ஒரு முழுமையாக கைதியாக இருக்கிறார். ஆனால் பெருமை கொள்பவர்களுக்கு, போலிகளுக்கு, வேஷதாரிகளுக்கு ஸ்ரீ ஹரி எட்டாத தூரத்தில் இருப்பார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 10-12-2018

    10-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 09-12-2018

    09-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 08-12-2018

    08-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • roborestchina

    சீனாவில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நவீன ரோபோ ரெஸ்டாரண்ட்!

  • KungFuBullFighting

    குங்ஃபூ கலையை பயன்படுத்தி காளை மாடுகளை அடக்கும் புதிய யுக்தி..: சீன வீரர்கள் அசத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்