SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

புளியங்குடி முப்பெரும்தேவியர் கோயிலில் பவுர்ணமி பூஜை

2018-01-03@ 14:36:49

புளியங்குடி: புளியங்குடி அரசு மருத்துவமனை அருகே முப்பெரும்தேவியர் பவானியம்மன் கோயிலில் உள்ள பெரியபாளையத்து பவானிஅம்மன், நாககன்னி அம்மன், பாலநாகம்மன் கோயிலில் மாதந்தோறும் சிறப்பு பாலாபிஷேகமும், பவுர்ணமி திருவிளக்கு பூஜையும் நடந்து வருகிறது. புத்தாண்டில் வந்த பவுர்ணமியை முன்னிட்டு மாலை 4 மணிக்கு சக்தியம்மா ஆன்மீகச் சொற்பொழிவு நடந்தது. 6 மணிக்கு முப்பெரும்தேவி அம்மனுக்கு பச்சைஅரிசி மாவு, பன்னீர், மஞ்சள், இளநீர், பழங்கள், திருநீறு, தயிர், குங்குமம், தேன், சந்தனம் உள்பட 21 வகையான அபிஷேகங்களும், உலக நன்மைக்காகவும், மழைவேண்டியும் 1008 லிட்டர் பாலாபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து முப்பெரும்தேவியருக்கு சிறப்பு அலங்காரங்கள், பெரிய தீபாராதனை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு 8 மணிக்கு பவுர்ணமி திருவிளக்கு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை கோயில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்