SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் பாத தரிசன நிகழ்ச்சி

2018-01-03@ 14:36:11

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் நேற்று நடைபெற்ற பாத தரிசன நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவாரூரில் வரலாற்று சிறப்பு மிக்க கோயிலாக தியாகராஜசுவாமி கோயில் இருந்து வருகிறது. இக்கோயிலின் முக்கிய விழாக்களில் ஒன்றான திருவாதிரை விழாவையொட்டி தியாகராஜசுவாமி மூலஸ்தானத்திலிருந்து ராஜநாராயணன் மண்டபத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி கடந்த 31ம் தேதி இரவு நடைபெற்று பின்னர் நேற்று முன்தினம் இரவு தியாகராஜருக்கு அர்ச்சனையும், நடராஜ பெருமானுக்கு திருவாதிரை மகா அபிசேகமும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று காலை 6 மணியளவில் தியாகராஜபெருமான் பதஞ்சலி வியாக்ரபாத முனிவர்களுக்கு பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை 4 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து தியாகராஜபெருமானை தரிசனம் செய்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்