SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஐயப்பன் அறிவோம்! சபரிமலை பயணம் - 47

2018-01-03@ 14:12:08

‘கரிமலை’ மீது ஏறி.....

மாலையிட்டு விரதமிருந்து பயணிக்கிற பக்தர்கள் ஐயப்பனை தரிசித்திட கரிமலையில் பயணிக்கிற நடை ரொம்பவும் கடினமானது. இம்மலை ஐயப்பனின் நான்காம் கோட்டை பெருமைக்குரியது. யானையை தமிழில் ‘கரி’ என்பர். ‘யானைக் கூட்டங்கள் வலம் வருகிற மலைப்பகுதி’ என்ற பொருள் தருகிறது. பயணத்தில் மலைச்சாலையில் ஆங்காங்கே யானைச் சாணம் பார்க்கலாம். பக்கவாட்டில் புதர்கள் விலகி இருந்து, இவ்வழியாகவே யானைகள் வந்து போவதைக் காட்டுகிறது. யானைகள் அச்சத்தால் இப்பகுதி கடைக்காரர்களே உயர்ந்த மரங்களில் குடில்கள் அமைத்தே இரவில் உறக்கம் கொள்கின்றனர். கரிமலை மீதேறுவது மட்டுமல்ல, இம்மலையிலிருந்து இறங்குதலும் மிகக் கடினமானதாகும். அனைவருமே மூச்சு வாங்குவர். செங்குத்தான இம்மலையில் ‘சுவாமியே ஐயப்பா’ எனும் கோஷத்துடன், பக்தி சக்தியில் பக்தர்கள் தலையில் இருமுடியுடன் ஏறுதல் ஒரு சவாலாகவே இருக்கிறது. ஐயப்பனே துணை வந்து மலையேற்றி, இறக்குகிறார் எனும் ஆன்மிக நம்பிக்கையும் வலிமை தருகிறது.

மலை உச்சியில் ‘கரிமலை பகவதி’, ‘கொச்சுக்கடுத்த சுவாமி’ கோயில் கொண்டுள்ளனர். மலையேறுவோர் தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி வழிபடுகின்றனர். இங்கிருக்கும் ‘நாழிக்கிணறு’, தெளிந்த, சுவைமிகு நீர் கொண்டிருக்கிறது. ஐயப்பன் இப்பகுதி வந்தபோது, தன்னுடன் வந்தோரின் தாகம் தீர்த்திட இங்கு தரையில் அம்பு விட்டதில், ஊற்றுப்போல தண்ணீர் பீறிட்டு வந்து தாகம் போக்கியதும் பேசப்படுகிறது. உச்சிப்பகுதியின் சமதளத்தில் ஏராள கடைகள் இருக்கின்றன. ஐயப்பமார்கள் சிறிதுநேரம் இங்கு இளைப்பாறுவதில் பெரும் சுகமிருக்கிறது. கரிமலையிலிருந்து இறங்கும்போதும் கவனம் வேண்டும். காட்டுப்பகுதி என்பதால், மாலை 4 மணி முதலே வெளிச்சம் சரிந்து, பொழுது சாய்ந்தால் கைவிளக்கு அவசியத் தேவை இருக்கும். மலை மீதிருந்து இறங்கியதுமே பம்பை நதியே வரவேற்கிறது...

நாளையும் மலையேறுவோம்...

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • jetairways_acci

  பயணிகளை கலங்கடித்த ஜெட் ஏர்வேஸ் - காது, மூக்கில் ரத்தம் காற்றழுத்தம் குறைந்ததால் விபரீதம்

 • thirupathieight

  திருப்பதியில் 8ஆம் நாள் பிரம்மோற்சவ விழா கோலாகலம் : கல்கி அவதாரத்தில் மலையப்ப சுவாமி

 • 21-09-2018

  21-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • chennaipolicefunction

  சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

 • railwaysecurityforce

  சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்