SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக நலன், விவசாயம் செழிக்க வேண்டி குலசேகரன்பட்டினத்தில் 1008 பால்குட ஊர்வலம்

2018-01-02@ 15:51:01

உடன்குடி:  உலக நலன் வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் 1008 பால்குட ஊர்வலம் நடந்தது. இதில் பெண்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி பக்தர்கள் அமைப்புகள் சார்பில் 11ம் ஆண்டாக பால்குடம் ஊர்வலம் மற்றும் அபிஷேக விழா நடந்தது. இதையொட்டி டிச. 31ம் தேதி முத்தாரம்மன் கோயிலில் சிறப்பு பூஜை, மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை, யாகசாலை  பூஜை, அன்னதானம் நடந்தது. நள்ளிரவு கற்பூரஜோதி வழிபாடு நடந்தது.

நேற்று காலை  6 மணிக்கு கணபதி ஹோமம், 1008 கலச பூஜை, உலக நலன்  வேண்டி மஹா சங்கல்பம், வேதபாராயணம், மஹா தீபாராதனை நடந்தது. பின்னர் கடற்கரை  சிதம்பரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், தொடர்ந்து ஆலயத்தில் இருந்து முத்தாரம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வருதல், அறம் வளர்த்த நாயகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதைத் தொடர்ந்து  1008 பால்குட ஊர்வலம் துவங்கியது. இதில் திரளாகப் பங்கேற்ற பக்தர்கள் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர்.  

கோயிலை வந்தடைந்ததும் விவசாயம் தழைக்க வேண்டி பாலாபிஷேகம், 108 கலசாபிஷேகம், மஹாஅபிஷேகமும் அதைத் தொடர்ந்து அன்னதானம் நடந்தது. பிற்பகல் 3 மணிக்கு 108 பெண்கள் குலவையிட்டு கும்மி பாட்டு பாடினர். மாலை 5 மணிக்கு அம்பாள் ஊஞ்சல் சேவை நடந்தது. இதைத்தொடர்ந்து  1008 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜையும், இரவில் பைரவருக்கு சிறப்பு பூஜையும் நடந்தது. பின்னர் அம்பாள் திருத்தேர் பவனி நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர்  செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 12-12-2018

    12-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramnathgovind

    மியான்மரில் அதிபர் ஆங் சான் சூகியுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

  • GuangxiZhuangcele

    தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • chinaexpo

    சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

  • londonbrexit

    சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்