SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அஞ்சலி வரத ஆஞ்சநேயருக்கு ஏழுமலையான் புஷ்பங்கி அலங்காரம்

2018-01-02@ 15:47:21

செம்பட்டி: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயருக்கு திருப்பதி ஏழுமலையான் புஷ்பங்கி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். சின்னாளபட்டி மேட்டுப்பட்டி பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ அஞ்சலிவரத ஆஞ்சநேயர் திருக்கோயில். இங்கு 16 அடி உயரத்தில் நின்ற நிலையில் தன்னை வணங்க வரும் பக்தர்களை வணங்குவது போல் சிலை அமைந்திருப்பது தனிச்சிறப்பு. இந்தியாவிலேயே இக்கோயிலில் உள்ள அஞ்சலிவரத ஆஞ்சநேயருக்குத்தான் 23 வகை சிறப்பு அலங்காரத்தை செய்கின்றனர்.

குறிப்பாக பஞ்சமுக அலங்காரம், பாலமாருதி அலங்காரம், சுயம் திருமேணி அலங்காரம், பச்சைகாப்பு அலங்காரம், செந்தூரக் காப்பு அலங்காரம், வெண்ணெய் காப்பு அலங்காரம், 1008 ஜிலேபி அலங்காரம், கரும்பு காப்பு அலங்காரம், கனிகாப்பு அலங்காரம், தியானமாருதி அலங்காரம், சரோபோஜி மன்னர் அலங்காரம் உட்பட பலவித அலங்காரங்களை செய்வதுண்டு.

நேற்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஸ்ரீஅஞ்சலிவரத ஆஞ்சநேயருக்கு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செய்வதுபோல் பலவித பூக்களை கொண்டு திருப்பதி ஏழுமலையான் புஷ்பங்கி அலங்காரம் செய்திருந்தனர். தினசரி ஆஞ்சநேயரை வழிபாடு செய்ய வந்த பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் தோற்றத்தில் ஸ்ரீஅஞ்சலி வரத ஆஞ்சநேயரை அலங்காரம் செய்திருப்பதை கண்டு மகிழ்ந்து தரிசனம் செய்தனர். இதுபோல உற்சவரான பெருமாளுக்கு அனந்தசயன திருக்கோல அலங்காரம் செய்திருந்தனர்.

*சிவசுப்பிரமணியருக்கு ராஜஅலங்காரம்

சின்னாளபட்டி கடைவீதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோவில். இங்கு ஆங்கில வருடப் பிறப்பை முன்னிட்டு நேற்று மூலவருக்கு அதிகாலை 5 மணியளவில் 16 வகை சிறப்பு அபிசேகங்கள் செய்து ராஜ அலங்காரம் செய்திருந்தனர். முன் மண்டகப் படியில் வைக்கப்பட்டிருந்த உற்சவரான வள்ளி  தேவசேனை சமேத முருகப் பெருமானுக்கு மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர். அதிகாலை முதல் கோயிலில் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்த வண்ணம் இருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 12-12-2018

    12-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramnathgovind

    மியான்மரில் அதிபர் ஆங் சான் சூகியுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

  • GuangxiZhuangcele

    தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • chinaexpo

    சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

  • londonbrexit

    சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்