SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவாலங்காடு வடாரேணீஸ்வரர் கோயிலில் நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம்

2018-01-02@ 15:44:31

திருத்தணி: திருத்தணி அடுத்த திருவாலங்காட்டில் வண்டார்குழலியம்மன் சமேத வடாரேணீஸ்வரர் கோயில் உள்ளது. சிவனுக்கு ஐம்பெரும் சபைகளில் ரத்தன சபையான முதல் சபை இக்கோயிலில் உள்ளது. பிரசித்தி பெற்ற கோயில். இங்கு, மார்கழி மாதம் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் இங்குள்ள நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அதுபோல் இந்தாண்டு சிறப்பு அபிஷேகம் நேற்று நடந்தது. கோயிலில் தலவிருட்சமான ஆலமரத்து அடியில் உற்சவ மூர்த்தி நடராஜர் சிலை வைத்து, பால், பழம், தயிர், விபூதி, தேன் மற்றும் வாசனை திரவியங்கள் வைக்கப்பட்டு விடியவிடிய சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. கோபுர தரிசனமான ஆருத்ரா தரிசனமும் நடந்தது. விழாவில்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதில் சிறப்பு விருந்தினராக செங்கை சரக டிஐஜி தேன்மொழி, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி, பள்ளிப்பட்டு தாசில்தார் தமிழ்செல்வி, துணை வட்டாட்சியர் பாரதி, வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன், திருவாலங்காடு கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் மகாலிங்கம், அதிமுக ஒன்றிய செயலாளர் சக்திவேல், டிடிவி தினகரன் அணி ஒன்றிய செயலாளர் ஜெயதேவன் உட்பட பலர் கலந்துகொண்டனர். அபிஷேக உபதாரர்கள் மீஞ்சூர் ஆர்.சி.சண்முகசுந்தரம்,  மணவாளநகர் பித்தன் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் தனலட்சுமி கலந்துகொண்டனர்.

கோவை மற்றும் சென்னையில் இருந்து வந்த பரதநாட்டிய கலைஞர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. சிவனின் திருவிளையாடல் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவையொட்டி பக்தர்கள் குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை தர்கார் ஜெயசங்கர், இணை ஆணையர் சிவாஜி மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர. டிஎஸ்பி பாலச்சந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதுபோல் நாபளூரில் உள்ள காமாட்சியம்மன் சமேத அகத்தீஸ்வரர் மற்றும் வடுகபைரவர் கோயில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆருத்ரா தரிசனம் நடந்தது.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-03-2018

  18-03-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • nigersaharafestival

  நைஜர் சஹாரா திருவிழா : நைஜீரியாவில் டுவரேஸ் இன மக்கள் பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்பு

 • RussiaCargoPlane

  ரஷ்ய சரக்கு விமானத்தில் இருந்து தங்க மழை: ஓடுதளத்தில் சிதறிய தங்கம் மற்றும் வைரம்

 • syria_war_evacuated

  சிரியா உள்நாட்டுப் போர் : தொடர் தாக்குதல்களால் கடந்த 24 மணிநேரத்தில் 50,000 பேர் வெளியேற்றம்

 • MarielleFrancodead

  பிரேசிலில் அரசியல்வாதி மேரில்லே பிராங்கோ சுட்டுக்கொலை: ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு மாபெரும் ஆர்ப்பாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்