SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஐயப்பன் அறிவோம்! சபரிமலை பயணம் - 46

2018-01-02@ 15:36:09

சோட்டானிக்கரை அம்மனை தேடி...!

சபரிமலை செல்லும் பக்தர்களின் பயணம் ‘சோட்டானிக்கரை பகவதி அம்மன்’ ஆலயத்திற்கும் இருக்கிறது. கேரளத்துக் கோயில்களில் புகழ்மிக்க இந்த கோயில் எர்ணாகுளம் அருகில் இருக்கிறது. திருபூனித்துராவில் உள்ள பூர்ணத்ராயேசா கோயில் வழியாக, இக்கோயிலைச் சேர முடியும். இங்கிருக்கும் ராஜராஜேஸ்வரி அம்மனை ‘பகவதி அம்மன்’ என்கின்றனர். கோயில் மூலஸ்தானத்தில் சிற்பக்கலைஞர்களால் செதுக்காத முழு வடிவமின்றி, பகவதி அம்மன் வீற்றிருக்கிறார். உற்சவர் தங்க விக்ரகமாக இருக்கிறார். சங்கு, சக்கரம் தாங்கிய நான்கு கைகளுடன் அன்னை உருவமிருக்கிறது. காலையில் வெண் பட்டாடை அணிந்து சரஸ்வதியாக, கருஞ்சிவப்பு வண்ண ஆடை அணிந்து பத்ரகாளி அவதாரமாக, மாலை நேரம் நீல நிற ஆடையுடுத்தி துர்காதேவியாக என இந்த அம்மனை 3 விதத்தில் தரிசித்து வழிபடுகின்றனர். இங்குள்ள சாஸ்தா சன்னதியில் பூர்ணா, புஷ்கலா தெளிவாக வரையப்பட்டுள்ளனர்.

சன்னதி முன் கொடி மரம், பலி பீடம் இருக்கிறது. கோயிலுக்குள் சிவன் சன்னதியும் இருக்கிறது. இங்குள்ள பத்ரகாளியம்மன் சன்னதிக்கு அருகில் உள்ள நூற்றுக்கணக்கான ‘பால’ எனும் மரங்களில் ஆணியடித்து பேயோட்டும் ஐதீகமும் இருக்கிறது. இதற்கான மந்திரவாதிகளும் இங்கிருக்கிறார்கள். கோயில் பகுதியில் கிபி 19ம் நூற்றாண்டு கொச்சி சமஸ்தான வரலாறு காட்டும் கோயில் கல்வெட்டுகளும் காண முடிகிறது. ‘வில்வமங்களம் சுவாமிகள்’ என்ற மகானுக்கும் தனிச்சன்னதி, அம்மன் சன்னதிக்கு முன்புறத்தில் இருக்கிறது. விரதமிருந்து மலையேறி ஐயப்ப தரிசனம் முடிப்போர், ஆன்மிக உணர்வில் கண்டு களித்து வழிபட்டு வர, இப்படி பகவதி அம்மன் உள்ளிட்ட பல்வேறு கோயில்கள் கேரளத்து மண்ணில் நிறைந்திருக்கிறது.

(நாளையும் மலையேறுவோம்....)

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mumbai_1010ganeshidole

  மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

 • sikimairportmodi

  சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

 • puppies_formation12345

  சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

 • philipines_landslidesaccid

  பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

 • tanzinaship_accid2121

  டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்