SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஐயப்பன் அறிவோம்! சபரிமலை பயணம் - 45

2018-01-02@ 15:34:31

நம்மூரு ‘வெல்ல’த்தில் பிரசாதம்...

கோயிலின் பிரதானம் பிரசாதம். சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதமாக இனிப்பான அரவணை பாயாசமும், அப்பமும் இருக்கிறது. மாலையிட்டு, விரதமிருந்து மலையேறி திரும்பகிற ஒவ்வொரு ஐயப்ப பக்தரும் தன்னைச் சுற்றிய உறவுகளுக்கு இந்த பிரசாதப் பகிர்வு செய்தபிறகே, ஆன்மிக மலையேற்றப் பயணம் முழுமை பெறும் ஐதீகமிருக்கிறது. கேரள மாநிலத்து மாவேலிக்கராவில் இருக்கும் செட்டிங்குளக்கரை தேவி கோயில் உள்ளிட்ட இடங்களில் இருந்து அரிசி, நெய் போன்றவை பெறப்படுகிறது. எனினும், இதற்கு இனிப்பூட்டும் வெல்லம் தமிழகத்தின் மதுரை அலங்காநல்லூர், அய்யூர், எர்ரம்பட்டி, கோட்டைமேடு, கொண்டையம்பட்டி, மேலச்சின்னம்பட்டி, வலசை, செம்புகுடிபட்டி கிராமங்களுடன், தேனி மாவட்டத்தின் லட்சுமிபுரம் உள்ளிட்ட இடங்களில் இருந்தே செல்கிறது.
 
இதற்கெனவே, ‘மலையாள வெல்லம்’ எனும் இவ்வெல்லம் உருட்டி எடுத்து தயாராகிறது. ஆண்டின் நவம்பர் துவங்கி பிப்ரவரி வரை தயாராகும் இவ்வெல்லமே சபரிமலை பிரசாத தயாரிப்பிற்கும் போகிறது. தென்மாவட்டத்து மண்ணில் முளைத்த கரும்பின் சாற்றைக் காய்ச்சியெடுத்து தயாராகும் இந்த வெல்லத்திற்கு கூடுதல் ‘தேன் சுவை’ இருக்கிறதென்கின்றனர். பழநி பஞ்சாமிர்தத்தில் சிறுமலை பழத்திற்கான முக்கியத்துவத்தை, சபரிமலை பிரசாதத்தில் தமிழகத்து இவ்வெல்லம் பிடித்திருக்கிறது. இவ்வித உருண்டையான வெண்ணிற வெல்லம், ‘மலையாள வெல்லம்’ பெயரிலேயே மதுரை கீழமாசிவீதிக் கடைகளிலும் விற்கப்படுகிறது. சபரிமலை சீசனில் இந்த வெல்லத்திற்கான வரவேற்பும் எகிறி இருக்கிறது.

(நாளையும் மலையேறுவோம்...) 

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mumbai_1010ganeshidole

  மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

 • sikimairportmodi

  சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

 • puppies_formation12345

  சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

 • philipines_landslidesaccid

  பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

 • tanzinaship_accid2121

  டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்