SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐயப்பன் அறிவோம்! சபரிமலை பயணம் - 44

2018-01-02@ 15:33:00

கல்யாண வரத சாஸ்தா...

கேரளத்து அச்சன்கோயில், தமிழகத்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட பல இடங்களிலும், பிரம்மச்சாரியான ஐயப்ப அவதாரத்திற்கு, இரு தேவியருடன் காட்சி தருகிற இந்த சாஸ்தாவே காரணம் என்கிறது புராணம். ‘குஹ்யரத்ன சிந்தாமணி சாஸ்தா த்ரிசதீ’ எனும் ஸ்லோகத்தில், சாஸ்தா ‘பத்து  கரங்களுடன்’ காட்சியளிப்பதாக கூறப்பட்டுள்ளது. அவர் தண்டம், கத்தி, சூலம்,  சங்கு, சக்கரம், வில் போன்ற ஆயுதங்களை ஏந்தியிருக்கிறார் என்கிறது.  ‘ஆதி மகா சாஸ்தா’, ‘தர்மசாஸ்தா’, ‘ஞான சாஸ்தா’, ‘சந்தான பிராப்தி சாஸ்தா’, ‘வீர சாஸ்தா’... இப்படி பல வடிவங்களை சாஸ்தா கொண்டிருக்கிறார். இதில் ஒன்றுதான் ‘கல்யாண வரத சாஸ்தா’. இவர் ‘பூர்ணா’, ‘புஷ்கலா’ தேவிகளுடன் காட்சியளிக்கிறார். இந்த சாஸ்தாவை பிரார்த்தித்தால் தடைபட்ட திருமணங்கள், சுப காரியங்கள் நடக்கும் நம்பிக்கை பக்தர்களிடம் மிளிர்கிறது.

சாஸ்தா குறித்த பழங்கதை அற்புதமானது. பளிஞவர்ம ராஜனின் மகள் புஷ்கலா. இவரை சாஸ்தா மணக்கிறார். பின்னர், பிஞ்சகவர்ம ராஜனின் மகள் பூர்ணாவையும் மணக்கிறார். இதில் கோபமுற்ற பளிஞவர்மனின் சாபத்தால், மணிகண்டனாக அவதாரம் எடுத்து ஐயப்பன் பிரம்மச்சாரியாக அருள்பாலிக்கிறார் என்கிறது புராணம். நேபாள மன்னன் பூபாலன் மகள்  புஷ்கலாவாக, காஞ்சி மன்னன் சிவபாலன் மகள் பூர்ணாவாக பிறந்து சாஸ்தாவை திருமணம் செய்கிற இச்சகோதரிகள், ‘சத்திய பூரணர்’ என்ற முனிவரின் கண்ணில் இருந்து தோன்றியவர்கள் என்றொரு புராணக் கதையும் இருக்கிறது. சுய கட்டுப்பாட்டில் விரதமிருப்பது ‘ஞான மார்க்கம்’.  சரணம், பூஜை, பஜனையில் காலம் கழிப்பது ‘பக்தி மார்க்கம்’. ‘புஷ்கலா’ எனும் ‘ஞான மார்க்கம்’, ‘பூர்ணா’ எனும் ‘பக்தி மார்க்கம்’. இவ்விரண்டு தேவிகளையும் ஐயன் ஏற்றதைப்போலவே,  நம் தூய பக்தியை இறைவன் ஏற்றருள்வான் என்கிற தத்துவமும் இருக்கிறது.

(நாளையும் மலையேறுவோம்....)

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-11-2018

    20-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thiruvan_5thdaycelb

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 5 ஆம் நாள்: விநாயகர், சந்தரசேகரர் மாட வீதியில் பவனி

  • rarephots_indiragandhi

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்கள்!

  • 2018_indiragandibirthdy

    இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 101 வது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!

  • america_winterstorm2018

    வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் தொடங்கியுள்ள முதல் பனிப்புயல்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்