SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிறிஸ்துவின் தொழுகை!

2018-01-02@ 09:52:41

கிறிஸ்துமஸ் என்றால் என்ன? என்ற ஒரு கேள்வியை சாதாரணமாக ஒரு மனிதனிடம் கேட்டால் அவன் சொல்லிவிடுவான்... ஊம்... இதுகூட தெரியாதா? இயேசுவின் பிறப்பை நினைவு கூர்ந்து கொண்டாடும் பண்டிகைதானே அது என்று. இது நூற்றுக்கு நூறு உண்மையே. கிறிஸ்துமஸ் என்றவுடன் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது,  கிறிஸ்துவ நண்பர்கள் வீட்டிற்குச் சென்று கேக் மற்றும் தடபுடல் விருந்துதான். ஆனால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் துவங்கிய பின்னணியும், அதில் ஏற்பட்ட பல மாறுதல்கள் குறித்தும் பலருக்கும் தெரியாது. இயேசுநாதர் எப்போது பிறந்தார், கிறிஸ்துமஸ் என்ற வார்த்தையின் பின்னணி ஆகியவை சுவாரஸ்யமானது.‘கிறிஸ்துமஸ்’ என்ற வார்த்தை கிறிஸ்ட் + மாஸ் என்ற இரண்டு வார்த்தைகளின் இணைப்பு. இதன் அர்த்தம் ‘கிறிஸ்துவின் தொழுகை.’ 5ஆம் நூற்றாண்டு வரை கிறிஸ்து பிறந்தது எந்த குறிப்பிட்ட நாள் என்பதைக் குறித்து ஒரு தெளிவான நிர்ணயம் இல்லாதிருந்தது.

இப்படிப்பட்ட காலத்தில் பல காரணங்களை கருத்தில் கொண்டு ஜனவரி 6ம் தேதியோ அல்லது மார்ச் 25ஆம் தேதியோ என்ற வேறுபட்ட கருத்துக்கள் இருந்து வந்தது. ரோம கத்தோலிக்க விளக்கத்தின்படி கி.பி. 171183 அந்தியோகியாவைச் சேர்ந்த ‘தியோப்பிலு’ என்பவரே டிசம்பர் 25ஆம் தேதியை கிறிஸ்து பிறந்த தினமாக நிர்ணயித்தார் என்று குறிப்பிடுகின்றனர். மேலும் இந்த நம்பிக்கைக்கு சரித்திரப்பூர்வமான எந்த ஆதாரமும் இல்லை. இந்த ‘தியோப்பிலு’ என்பவரின் நம்பிக்கையை செயல்படுத்தியது 5ம் நூற்றாண்டே. எப்படி இருப்பினும் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று சார்லிமேனி என்ற பேரரசன் மன்னராகப் பதவியேற்றான். மேலும் கி.பி.1377ம் ஆண்டு இங்கிலாந்து மன்னன் ரிச்சர்ட்  II கிறிஸ்துமஸ் பண்டிகையை மிக விமர்சையாகக் கொண்டாடினார். கடந்த 1643ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தீவிற்கு ‘கிறிஸ்துமஸ் தீவு’ என்று பெயரிடப்பட்டது.

இப்படி கிறிஸ்துமஸ் பண்டிகை நாட்டு மக்களிடையே பிரபலமடைந்து பின் உலகெங்கும் விமர்சையாகக் கொண்டாடும் வழக்கம் உருவானது. கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே நினைவுக்கு வருவது கிறிஸ்துமஸ் மரம், கிறிஸ்துமஸ் தாத்தா, கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ‘கிறிஸ்துமஸ் மரம்’ இடம் பெற்றதும் 8ஆம் நூற்றாண்டில் அது ஜோடிக்கப்பட்டு பின் பண்டிகை கொண்டாடல் இடம் பெற்றதோ 15ஆம் நூற்றாண்டில்.‘கிறிஸ்துமஸ் தாத்தா’ என்று அழைக்கப்பட்டவர் ‘நிக்கோலாஸ்’ என்ற பாதிரியார். இவர் பிறருக்கு உதவி செய்வது மறைமுகமாக செய்துவந்தார். ஒருமுறை குளிர் அதிகமான ஓர் இரவில் அநேக பெண்கள் உணவு இல்லாமல் பசியோடு இருப்பதை அறிந்து அவர்கள் வசிக்கும் வீட்டின் மேல் உள்ள புகைக்கூண்டின் வழியே தன் மணிபர்சை போட்டார். அது வீட்டில் இருந்த ‘சாக்ஸி’னுள்  விழுந்துவிட்டது. காலை எழுந்து சாக்ஸ் போடும்போது உள்ளே இருந்த மணிபர்சைக் கண்டு தங்கள் பசியை போக்கினர். இவரை ‘சான்டாகிளாஸ்’ மாற்றானுக்கு உதவி செய்யும் தாத்தாவாக மாற்றி விட்டனர்.

கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் 1843ஆம் ஆண்டு இங்கிலாந்தில் வாழ்ந்த ஹென்றி கோல் (Henry Cole)  என்பவரால் அனுப்பப்பட்டது. இவர் தன் நண்பர் ஜான் ஹார்சிலே என்பவருக்கு வாழ்த்து அட்டை அனுப்பினார். அதில் ஒரு குடும்பம் ஏழைகளுக்கு உதவி செய்யும் ஒரு படத்தை உடையதாய் இருந்தது. அதில் ‘அடக்க முடியாத பொங்கி வழியும் உற்சாகம்’ (Brimming Cheer) என்ற வாசகம் காணப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது கிறிஸ்தவர்கள் குழுக்களாகச் சேர்ந்து ‘கேரல் சர்வீஸ்’ என்ற நிகழ்ச்சியை நடத்துகின்றனர். இந்த கேரல் நிகழ்ச்சியில் குழந்தை இயேசுவை வாழ்த்தியும், அவரது பிறப்பு, அவர் உலகில் வந்த நோக்கம் உள்ளிட்ட கருத்துக்களை கொண்ட பாடல்கள் பாடப்படுவது வழக்கம். கடந்த 1847ஆம் ஆண்டு பிரான்சில்தான் முதன்முதலாக கிறிஸ்துமஸ் கேரல் சர்வீஸ் நடத்தப்பட்டதாகவும், இந்த கேரலில் ‘‘ஓ ஹோலி நைட்’’ என்ற பிரபல கிறிஸ்துமஸ் பாடல் பாடப்பட்டதாக கூறுகின்றது. மொத்தத்தில் நல்லது ஓங்கவும், தீயது அழியவும் இந்த நன்னாளை உலக மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இயேசு பெருமானை இறைஞ்சி, துதிபாடி மகிழ்கின்றனர் என்பது சந்தோஷமான விஷயம்தான்.
 
ந.இம்மானுவேல் இளவேந்தன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-10-2018

  21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • dussehraa_11

  நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

 • 20-10-2018

  20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • tirupathivavacha

  திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

 • kulasaidasaraeight

  வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்