SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐயப்பன் அறிவோம்! சபரிமலை பயணம் - 43

2017-12-30@ 11:32:55

புதைந்து மீண்ட குளத்துப்புழை கோயில்...

ஐயப்பனின் முக்கிய தலப்பெருமைக்குரியது குளத்துப்புழை. இங்கு ‘பாலசாஸ்தா’ பெயரில் குழந்தை வடிவில் ஐயப்பன் காட்சியளிக்கிறார். சபரிமலை, அச்சன்கோயில், ஆரியங்காவுடன் ஐயப்பனுக்கு குளத்துப்புழையிலும் பரசுராமரே கோயில் எழுப்பினார். அத்தனை கோயிலும் கேரளத்து ஒரே மலைத்தொடரில் இருக்கிறது. கல்வி, ஆரோக்கிய மேம்பாட்டிற்கான இக்கோயிலில் பரசுராமரின் பிரதிஷ்டைக்குப்பிறகு, காணாமல் போய், மீண்டும் அறியப்பட்டது ஓர் ஆச்சர்ய வரலாறாகும்.
கொட்டாரக்கரை மன்னர், தனது வீரர்களுடன் கேரளத்து கல்லடை ஆற்றங்கரையில் ஓய்வில் இருந்தார். உணவுக்காக அடுப்பு மூட்ட அங்கு கற்கள் தேடினர். கிடைத்த ஒரு பெரிய கல்லை சிறிதாக்க, அதன்மீது மற்றொரு பெரிய பாறையை போட்டனர். கீழே இருந்த கல் அப்படியே இருக்க, பெரிய பாறையோ 8 துண்டுகளாக உடைந்தது. அதிலிருந்து ரத்தம் சொட்டியது கண்டு  வீரர்களுடன், மன்னரும் பதறிப் போனார். ஜோதிடரை வரவழைத்து, இறைக் கருத்தறிய தேவப்பிரஸ்னம் பார்க்கப்பட்டது. இதில், உடைந்த கல் ஒருகாலத்தில் பரசுராமர் பிரதிஷ்டை செய்த ‘ஐயப்பன் விக்ரகம்’ எனத்தெரிந்தது. எனவே மன்னர் இதே இடத்தில் ஐயப்பனுக்கு கோயில் எழுப்பி, குழந்தை வடிவிலான ஐயப்பனையும் பிரதிஷ்டை செய்தார். குழந்தைகள் நுழைய ஏதுவாக உயரம் குறைந்த நுழைவுவாயில் இக்கோயிலின் ‘அடையாளம்’ காட்டுகிறது.

ஐயப்ப விக்ரகத்தின் உடைந்த 8 துண்டுகளும் கருவறையில் இருக்கின்றன. பூஜையின்போது இணைத்தும், மீண்டும் பழையபடி இதனை பிரித்தும் வைக்கின்றனர். மேலும், ஐயப்பனை நேசித்த மச்சக்கன்னி தன் தோழிகளுடன் இங்குள்ள கல்லடை ஆற்றில் மீன்களாக இருப்பதாக ஐதீகமிருக்கிறது. எனவே, இந்த மீன்களுக்கு பக்தர்கள் பொரி போடுவதும் ஒரு வழிபாடாக இருக்கிறது.  தோல்நோய்கள் தீரும் நம்பிக்கையும் உள்ளது. இப்பகுதியில் மீன்பிடிக்க தடை இருப்பதுடன், எத்தனை பெரிய வெள்ளத்திலும் இந்த கல்லடை ஆற்றுப் பகுதியை இம்மீன்கள் விட்டுச் செல்லாமல் இருப்பதும் வியப்பு நிறைக்கிறது.  

(நாளையும்மலையேறுவோம்....)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • thaneer_laari_kudam11

  குடிநீர் பஞ்சம் எதிரொலி : 'குடம் இங்கே, தண்ணீர் எங்கே?’.. தமிழக அரசை கண்டித்து ஸ்டாலின் தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம்

 • kali_dogsa1

  கலிபோர்னியாவில் அழகற்ற நாய்களுக்கான போட்டி : 19 நாய்கள் பங்கேற்பு

 • firoilsuthigari11

  அமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் 2 நாட்களாக பற்றி எரிந்த தீ : மாபெரும் போராட்டத்திற்கு பின் அணைப்பு

 • 24-06-2019

  24-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-06-2019

  23-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்