SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐயப்பன் அறிவோம்! சபரிமலை பயணம் - 42

2017-12-29@ 10:57:38

தரிசனத்திற்கான காலங்கள்...

சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்திற்கென குறிப்பிட்ட காலங்களுக்கே ஆலயம் திறந்திருக்கும். ஒவ்வொரு மலையாள மாதமும் 1ம் தேதியில் இருந்து 3ம் தேதி வரையிலும், விஷூ (தமிழ் வருடப்பிறப்பு) நாளையொட்டி தொடர்ந்து 5 நாட்களும், ஓணம் பண்டிகைக்கு 5 நாட்களும், ஐயப்பன் அவதரித்த பங்குனி உத்திர நட்சத்திர நாள் முதல் 4 நாட்களும் ஆலயம் திறக்கப்படுகிறது. மாதப்பிறப்பை ஒட்டி நடை திறக்கும் முதல் நாளில் ஐயப்பனுக்கு அபிஷேகம் கிடையாது. மற்ற நாட்களில் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை அபிஷேகம் நடைபெறும். பகல் 12 மணிக்கு நடை அடைக்கப்படும். பிறகு மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை நடை திறந்து இருக்கும். படி பூஜை உள்ள நாட்களில் இரவு 12 மணிக்கு நடை திறந்திருக்கும். விஷூ பூஜையன்று அதிகாலை 4 மணி முதல் 1 மணி வரை பூ மூடல் தரிசனம் எனும் விஷூ கனி நடைபெறும். அன்று காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரைதான் அபிஷேகம் நடைபெறும்.

கார்த்திகை முதல் தேதியில் இருந்து 41வது நாள் முடிவடையும்போது ஒரு மண்டலம் ஆகும். 41வது நாளன்று மண்டல பூஜை நடத்துவர். அன்று அதிகாலை 4 மணியில் இருந்து பகல் 1 மணி வரை அபிஷேகம் நடைபெறும். இரவு நடை அடைக்கப்படும். மகரவிளக்கிற்கென ஜன. 1ல் மீண்டும் நடை திறக்கப்பட்டு, ஜன. 14ம் தேதி மகரஜோதி தரிசனம், திருஆபரண தரிசனம் கண்டு களிக்கலாம்.  ஆவணி மாதம் திருவோண நட்சத்திர நாளில் இருந்து 41 நாட்கள் மற்றும் கார்த்திகை முதல் தேதியிலிருந்து 41 நாட்கள் ஐயப்பன் ஆலயமானது பக்தர்களின்  வருகையை எதிர்நோக்கித் திறந்திருக்கும். அதேபோல் மார்கழி மாதம் 25ம் தேதி முதல் மகரவிளக்க தரிசனத்தை ஒட்டி 12 நாட்களும் கோயில் திறந்திருக்கும். தவிர பங்குனி உத்திரம், வைகாசி ஹஸ்தம் நட்சத்திர நாட்களிலும் திறந்திருக்கும்.  

(நாளையும் மலையேறுவோம்....)

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bathnatural

    சர்வதேச இயற்கை மருத்துவத் தினத்தை முன்னிட்டு மணல் குளியல் விழிப்புணர்வு

  • puegovolconoerupt

    கவுதமாலாவில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியது : 4,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம்

  • delhiproblem

    டெல்லியில் நிலவும் பனிப்புகை மூட்டத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி

  • colombiacarfestival

    கொலம்பியாவில் 29வது கார் திருவிழா : தானியங்கி வாகங்களில் மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு

  • vietnamramnathgovind

    வியட்நாமில் தேசிய சபை தலைவர் நிகுயென் தி கிம் நிகானுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்