SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐயப்பன் அறிவோம்! சபரிமலை பயணம் - 41

2017-12-28@ 11:04:47

‘மஞ்ச மாதா’வின் கதை...

சபரிமலைக்கு முதன்முதலாக மாலையணிந்து, விரதமிருந்து, இருமுடியுடன் பயணிக்கிற பக்தர் ‘கன்னிசாமி’யாவார். ‘சரம்’ என்ற குச்சியை தன்னுடன் எடுத்துச் செல்லும் இவர், ‘சரங்குத்தி’ என்ற இடத்திலே அதனை குத்திச் செல்கிற நடை முறையுண்டு. இந்நிகழ்விற்கு பின்னே ஐயப்பன் மீதான் அன்புமிக்க ‘மஞ்ச மாதா’வின் வரலாறும் வாழ்கிறது.

மகிஷாசுரனின் சகோதரி மகிஷி. துர்காதேவி மகிஷாசுரனை அழித்ததில் மகிஷிக்கு பெருத்த கோபம். எனவே தேவர்களை மகிஷி துன்புறுத்துகிறாள். புலிப்பாலுக்காக காட்டுக்கு வந்த ஐயப்பன், மகிஷியை வதம் செய்கிறார். அரக்கி உருவம் மாறி, அவ்வுடலில் இருந்து ‘லீலா’ எழுகிறாள். தத்தாத்ரேயரின் மனைவியான லீலா, சாபத்தால் மகிஷியாகப் பிறந்தவள். தன்னை மன்னித்து அருள்புரிந்த  ஐயப்பனையே மணக்க விரும்பும் ‘லீலா’வை, பிரம்மச்சாரிய ஐயப்பனோ, ஏற்க மறுக்கிறார். ‘‘நீ ‘மஞ்ச மாதா’ திருப்பெயரில் சபரிமலையில் எனக்கருகில் கோயில் கொள்வாய்’’ என்றொரு வரம் தருகிறார். தொடர்ந்து, ‘‘என்னை தரிசித்திட கன்னிசாமி பக்தர் ஒருவர் கூட எந்த ஆண்டிலாவது வரவில்லையோ, அப்போது உன்னை மணக்கிறேன்’’ என்கிறார் ஐயப்பன்.

சபரிமலையில் ஐயப்பன் சன்னிதானம் அருகே ‘மாளிகைபுறத்தம்ம’னாக மஞ்சமாதா சன்னதி கொண்டிருக்கிறார். முழுத் தேங்காயை தரையில் உருட்டியபடி இந்த சன்னதியை கன்னிசாமிகள் வலம் வந்து பிரார்த்திப்பதும் நடக்கிறது. இத்துடன், மஞ்சள், சிவப்பு நிற பிளவுஸ் பிட், இருமுடியில் எடுத்துச் செல்லும் மஞ்சள், குங்குமம் போன்றவற்றை மஞ்சமாதா சன்னதியில் வைத்தும் பக்தர்கள், திருமணத் தடை, சுபகாரியத் தடை நீங்கிட பிரார்த்திக்கின்றனர்.

ஒவ்வோர் ஆண்டும் ‘சரங்குத்தி’ பகுதிக்கு, ‘இம்முறை ஒரு கன்னிசாமியாவது வராமல் இருக்கிறாரா?’ என்று ஆவலோடு மஞ்சமாதா வந்து பார்க்கும் ஐதீகமாக இருக்கிறது. அங்குள்ள கன்னிசாமிகள் செருகிச் சென்ற சரங்களைக் கண்டு ஏமாற்றத்தோடு திரும்பும் புராணக்கதையும் இருக்கிறது. இங்குள்ள மஞ்சமாதா கோயில் வெளிக்கதவுகள் எப்போதுமே திறக்கப்படுவதில்லை என்பதும் கூடுதல் தகவல்.

(நாளையும் மலையேறுவோம்...)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

 • apollo

  புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்