ஐயப்பன் அறிவோம்! சபரிமலை பயணம் - 40
2017-12-27@ 10:20:25

மாலையிட்டு, விரதமிருந்து மகத்தான தரிசனம்...
ஒரு பக்தரின் உள்ளச்சுத்தியே பிரதானம். அவர் கடவுளை எப்பெயர் கொண்டு அழைத்தாலும், அவருக்கான உதவிகள் வழங்கிட அவர் ஓடோடி வருவார். சபரிமலையில் வீற்றிருக்கிற ஐயப்பனுக்கு ‘சபரிமலை வாசன்’ என்றொரு பெயருண்டு. அரச குடும்பத்தில் பிறந்ததால் ‘ராஜ்ஜியகுமாரர்’, பிரம்மச்சாரியம் மேற்கொண்டதால் ‘யோகமூர்த்தி’, திருமாலும், சிவனும் சேர்ந்து கையில் ஈன்றெடுத்ததால் ‘கையன்’, ‘கையானார் கையன்’ என்றழைக்க வேண்டியதை ‘ஐயப்பன்’, ‘ஐயனார்’ என்கின்றனர். சிவபெருமானிடம் வரம் பெற்றதால் ‘வரப்பிரசாதன்’ என்றொரு பெயரும் ஐயப்பனுக்கு இருக்கிறது. ஆறுபடை வீடு கொண்ட பெருமைக்குரியவர். ஆரியங்காவு, அச்சங்கோவில், பந்தளம், குளத்துப்புழா, எருமேலி, சபரிமலை என ஆறு இடங்களில் எழுந்தருளி ஐயப்பன் அருளாட்சி புரிகிறார்.
பம்பையில் சுவாமி ஐயப்பன் கழுத்தில் மணிமாலையுடன் சிறு குழந்தையாக மன்னர் ராஜசேகரனால் கண்டெடுக்கப்பட்டார். பந்தளத்தில் அவர் வளர்க்கப்பட்டார். பாலகனாக குளத்துப்புழையில் ஐயப்பன் வளர்ந்தார். மணிகண்டனாக ஆரியங்காவில் அரசாட்சி புரிந்தார். எரிமேலியில் புலிப் பாலுக்காக வேட்டைக்கு சென்றார். சபரிமலையில் சாஸ்தாவாக அருள்பாலிக்கிறார். இத்துடன், ஆரியங்காவில் சுவாமி ஐயப்பன் சாதாரண நிலையில் இருக்கிறார். அச்சங்கோவிலில் ஐயப்பன் பூரணை புஷ்பகளையோடு காட்சி தருவதால், ‘கல்யாண சாஸ்தா’ என்கிறோம். பந்தளத்தில் சுவாமி ஐயப்பனின் ஆபரணங்கள் இருக்கிறது. குளத்துப்புழையில் ஐயப்பன் குழந்தைப்பருவத்தில் இருப்பதால், ‘பாலசாஸ்தா’ என்றழைக்கிறோம். காட்சிகளில் வேறுபட்டு இருப்பினும், பரம்பொருள் ஒன்றென்ற தத்துவமே எகிறி நிற்கிறது. எங்கெங்கும் வியாபித்திருக்கிற அந்த ஒளி வெள்ளத்தை, மாலையிட்டு, விரதமிருந்து, மலைப்பயணத்தில் சபரிமலையைச் சேர்ந்து தரிசித்துத் திரும்புகிற பேறு மகத்தானது...
(நாளையும் மலையேறுவோம்...)
மேலும் செய்திகள்
ஐயப்பன் அறிவோம்! சபரிமலை பயணம் - 60
ஐயப்பன் அறிவோம்! சபரிமலை பயணம் - 59
ஐயப்பன் அறிவோம்! சபரிமலை பயணம் - 58
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்
ஐயப்பன் அறிவோம்! சபரிமலை பயணம் - 57
ஐயப்பன் அறிவோம்! சபரிமலை பயணம் - 56
கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி
ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு
கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்
பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்