SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஐயப்பன் அறிவோம்! சபரிமலை பயணம் - 39

2017-12-26@ 10:34:06

மதுரையிலிருந்து சீர்வரிசை...

பரசுராமர் பிரதிஷ்டை செய்த கோயில்களில் ஒன்றாக ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயில் இருக்கிறது. இங்கு புஷ்கலா தேவியுடன் திருஆர்யன் என்ற பெயரில் ஐயப்பன் அருள் பாலிக்கிறார். திருவிதாங்கூர் மன்னனுக்கென பட்டாடைகளை நெய்த நெசவு வியாபாரி, தன் மகள் புஷ்கலாவையும் அழைத்துக்கொண்டு பயணம் செல்கிறார். காட்டு வழியில் பெரும் ஆபத்து என்பதால், ஆரியங்காவு சாஸ்தா கோயில் அர்ச்சகரின் வீட்டில் மகளை பாதுகாக்கும்படி ஒப்படைத்துச் செல்கிறார். மலர்களை பறித்து ஐயப்பனுக்கு மாலை தொடுத்த புஷ்கலா, நாளடைவில் ஐயப்பன் மீது அபரித அன்பு கொள்கிறார். மன்னரிடம் ஆடைகளைக் கொடுத்து விட்டு நெசவாளியான வியாபாரி திரும்புகிறார். அப்போது,  காட்டில் மத யானை ஒன்று, வியாபாரியைத் தாக்க வருகிறது. வியாபாரியின் அச்சமிக்க அலறல் கேட்டு அங்கு வந்த இளைஞர், யானையை அடக்கி, அவரைக் காப்பாற்றுகிறார். மகிழ்ந்த வியாபாரி இளைஞரிடம், ‘என்ன வேண்டுமோ கேள்’ என்கிறார். ‘உங்கள் பெண்ணை திருமணம் செய்து தருகிறீர்களா?’ என்றதும், வியாபாரியும் சம்மதம் தெரிவிக்கிறார். அத்தருணமே அந்த இளைஞரும் திடீரென மாயமாகிறார்.

குழப்பத்துடனேயே ஆரியங்காவு திரும்பிய அந்த வியாபாரி, ஐயப்பனாக கருவறையில் கோயில் கொண்டிருப்பது, தன்னை மத யானையிடமிருந்து காத்த இளைஞர் வடிவில் இருப்பது கண்டு சிலிர்க்கிறார். ஐயப்பனே நேரில் எழுந்தருளி புஷ்கலாவை கரம் பிடித்தார் என்கிறது புராணம். ஆரியங்காவு கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடக்கும் திருமண உற்சவத்திற்கு, இன்றளவும் மதுரையிலிருந்து ஒரு சமூகத்தினர் சீர் வரிசை எடுத்துச் செல்வது வழக்கத்தில் இருக்கிறது.

(நாளையும் மலையேறுவோம்...)

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-09-2018

  23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 22-09-2018

  22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • muharamfest

  நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

 • nasaevanaktrump

  அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

 • florence&trumph

  பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்