SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐயப்பன் அறிவோம்! சபரிமலை பயணம் - 38

2017-12-26@ 10:31:40

துறவிக்கு ஏன் நகை அலங்காரம்...

மகரவிளக்கு நாளின்போது பந்தளத்திலிருந்து 85 கிமீ தூரத்திற்கு தலைச்சுமையாக கொண்டு வரப்படும் தங்கம், வைர, ரத்தின ஆபரணங்கள் பூட்டி ஐயப்பன் அருளாட்சி தருகிறார். துறவியான ஐயப்பனுக்கு ஏன் பொன் நகைகள் மீதான விருப்பம்? இதற்கென ஓர் அபூர்வ அழகிய காரணம் இருக்கிறது. தன் ‘அவதார’ நோக்கத்தின் காரணமாக பந்தள நாடு விட்டு, சபரிமலைக்கு ஐயப்பன் கிளம்புகிறார். அனைவரையும் தனித்தனியாகச் சந்தித்து, விடைபெறுகிறார். பந்தள நாட்டில் குருவாக இருந்தவரிடம், ‘தங்களுக்கு குருதட்சணையாக என்ன தர வேண்டும்?’ என்கிறார். நெகிழ்ந்திட்ட குரு, ‘நீங்கள் என் மாணவர் என்பதே போதும்’ என்கிறார். குருவின் மனைவியோ, ‘வாய் பேச முடியாத, பார்வை தெரியாத என் குழந்தையை  குணப்படுத்தித் தாருங்கள்’ என்கிறார்.

இதன்பேரில் அக்குழந்தைக்கு பேச்சு, பார்வை கிடைக்கச் செய்கிறார். அந்நேரம் தெய்வமென்பதையும் மறந்த நெகிழ்வில், ‘அய்யனே.. நீங்கள் தங்கமும், ரத்தினங்களும் ஜொலிக்க மகாராஜனாக இருக்க வேண்டும்’ எனக்கூறி குரு ஆசீர்வதிக்கிறார். ஆண்டுக்கு ஒருமுறை மகரவிளக்கு நாளில், அதாவது தை மாதம் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரையிலும் பந்தளராஜன் பரம்பரையினர் சுமந்து வரும், ஆயிரம் சவரனுக்கும் அதிக எடையுள்ள ஆபரணங்களை ஐயப்பன் அணிகிறார். அனைத்தும் கடந்த ஐயப்பன், குருவின் விருப்பத்திற்கு மதிப்பளித்தே இந்நகைகள் அணியப்படுகின்றன. குருவின் வார்த்தையை நிஜப்படுத்த, ஒரு சிஷ்யன் காட்டிய விசுவாச அடையாளத்தையே இக்காட்சி காட்டி நிற்கிறது.

(நாளையும் மலையேறுவோம்....)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SouravGangulyBCCI

    பிசிசிஐ அமைப்பின் 39வது தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பதவியேற்பு..: புகைப்படங்கள்

  • SkyCityFireAuckland

    நியூசிலாந்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த மாநாடு மையத்தில் 2வது நாளாக பற்றி எரியும் தீ..: அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டம்!

  • NorthKarnatakaRain23

    கர்நாடகாவில் மீண்டும் கொட்டித் தீர்க்கும் கனமழை..: 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின

  • DiwaliPrep2k19

    நெருங்கி வரும் தீபாவளி...: விளக்குகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்...பட்டாசு, பரிசுப் பொருட்கள் விற்பனை படுஜோர்!

  • DanishLightHouse

    கடலரிப்பினால் நகர்த்தி வைக்கப்படும் 120 ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கம்...: டென்மார்க்கில் ஆச்சரியம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்