SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐயப்பன் அறிவோம்! சபரிமலை பயணம் - 37

2017-12-26@ 10:28:33

வெடி வழிபாடு தெரியுமா...!

சபரிமலையில் காடுகளை கடந்தே பயணம் இருக்கிறது. வனவிலங்கு ஆபத்து கருதியே  ஆடை முதல் அத்தனையிலும்  பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகள் இருக்கின்றன. ஐயப்பனின் ஐந்தாம் கோட்டையாக சபரி அன்னை தவம் செய்த ‘சபரிபீடம்’ இருக்கிறது. இங்கு சிதறுகாய் உடைத்து, கற்பூரமேற்றி பக்தர்கள் வழிபடுகின்றனர். இதன் தொடர்ச்சியாக வெடி வழிபாடும் நடத்தப்படுகிறது. ஒரு காலத்தில் கையாண்ட நடைமுறை, இப்போது சடங்காகவே மாறி இருக்கிறது. இவ்வழிபாட்டு முறை வித்தியாசம், சுவராசியம் கொண்டிருக்கிறது. காளைகட்டி போன்ற வனப்பகுதியுடன், ஆரியங்காவு, குளத்துப்புழை, எருமேலி எனக் கோயில்களிலும் வெடி வழிபாடு நடக்கின்றன. இதற்கென ஒரு காணிக்கையும் செலுத்த வேண்டும். பக்தரின் பெயரை ஒலிபெருக்கியில் சொல்ல, அவரது குடும்பத்தினரின் உடல் உள்ளத்திற்கு நலம் தர ஐயப்பனிடம் வேண்டுதல் செய்யப்படுகிறது. அறிவிப்பின் முடிவில் வெடி வெடிக்கப்படும். இதற்கான வெடிச்செலவே காணிக்கை.

இத்துடன் மலைப்பயணத்தில் வனவிலங்குகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக, பாதுகாப்பான பக்தர்கள் தங்குமிடங்களும் உள்ளன. இதனை தாவளம் என்கின்றனர். அழுதா நதிப்பகுதியில் நடந்து களைத்தோர், முக்குழித்தாவளம் எனும் பகுதியில் ஓய்வெடுக்கின்றனர். சிவன், கணபதி, தேவி சன்னதிகளும் இங்கிருக்கின்றன. பெருவழிப்பாதையின் இருபுறமுமும் ஏராளமான கடைகளும், இங்கெல்லாம்  குளிர்பானம் முதல் அவித்த கிழங்குகள் வரை விற்பதும் இருக்கிறது. மலைப்பாதையின் ஓரப்பகுதிகளை சரிசெய்து சமப்படுத்தி ‘பிளாஸ்டிக் ‘சீட்’ விரித்து வைத்திருக்கின்றனர். ‘விரி’ எனப்படும் இந்த ஓய்விடத்தில் பக்தர்கள் தங்கிச் செல்கின்றனர். முக்குழித்தாவளம் பகுதியில் ஏராளமான ‘விரி’கள் இருக்கின்றன. பக்தர்கள் இங்கு ஓய்வெடுத்து நகர்வதில் உடல் அலுப்புடன், பல்வேறு ஆன்மிகக்கதைகள் பேசி செல்வதால் மன அலுப்பும் மலையேறுகிறது.

(நாளையும் மலையேறுவோம்...)

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • NabiBdaykabulBlast

  ஆப்கானிஸ்தானில் மத வழிபாட்டுக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு: 50 பேர் பலி...பலர் படுகாயம்

 • TurkeyThanksGvingTrump

  வான்கோழியை மன்னித்தார் டிரம்ப்...: அமெரிக்காவில் தொடங்கியது தேங்க்ஸ்கிவிங் விழா!

 • Chicagohospitalkill

  அமெரிக்காவின் சிகாகோ மருத்துவமனையில் வாலிபர் துப்பாக்கிச்சூடு : 4 பேர் பலி

 • MahanathiBridgeAccident

  ஒடிசாவில் ஆற்றுப் பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து: 12 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

 • Deebam7thDay

  திருவண்ணாமலை தீபத்திருவிழா உற்சவத்தின் 7ம் நாளில் கோலாகலம்: பக்தர்கள் வெள்ளத்தில் மகா ரதம் பவனி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்