SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஐயப்பன் அறிவோம்! சபரிமலை பயணம் - 36

2017-12-23@ 12:56:36

திருவாபரண ஊர்வலத்தில்...

ஐயப்பனை பம்பை நதிக்கரையில் எடுத்து வளர்த்திட்ட தந்தை பந்தள மன்னர் ராஜசேகர பாண்டியன். இவர் தனது புத்திரனுக்கு பொன் நகை பூட்டிப் பார்க்கும் ஆசை இருந்தது. இப்படி  ஏராளமான ஆபரணங்கள் பூட்டி அழகு பார்த்த நிகழ்வை நினைவு கூறும் விதமாகவே சபரிமலை கோயிலில் ஆண்டுதோறும் மகரஜோதியன்று ஐயப்பனுக்கு ஆபரணங்கள் அணிவிப்பது நடக்கிறது. இதற்காக பந்தளத்தில் இருந்து திருவாபரணப் பெட்டி சபரிமலைக்கு ஊர்வலமாகக் கொண்டு வரப்படுவதும் ஓர் அற்புத திருவிழாக் கொண்டாட்டத்தைத் தருகிறது. பந்தளம் வலியக்கோயில் ஐயப்பன் சன்னதியில் இருந்து இந்த ஊர்வலம் துவங்குகிறது. பந்தள மன்னரின் வாரிசு உடைவாள் ஏந்தி முன்னதாக நடையிட, திருவாபரணப் பெட்டி, வெள்ளிப்பெட்டி, கொடிப்பெட்டி என 3 பெட்டிகள் ஊர்வலத்தில் இடம்பிடிக்கின்றன.

திருவாபரணப் பெட்டியானது பொன் மகுடம், கடகம், ஆரம், நூபுரம், கடிஞாண், அங்குலியம், பதக்கம் என தங்க வைர ஆபரணங்களால் நிறைந்திருக்கும். வெள்ளிப்பெட்டியில் பூஜைப் பொருட்களுடன் கலசம், மற்றொரு பெட்டியில்  சில கொடிகள் இருக்கும். இவ்வூர்வலம் துவங்கியது முதலே பந்தளம் துவங்கி சபரிமலை வரையிலும் வானில் கருடன் பறக்கும் அதிசயம் நடக்கும். அய்ரூர் புதிய காவுதேவி கோயில், லாகா சத்திரம் வழியாக 85கிமீட்டர் தூரம் தலைச் சுமையாகவே இந்த ஆபரணப் பெட்டிகளை பந்தள மன்னரின் பிரதிநிதிகள் சுமந்து, 3ம் நாளில் மகரஜோதி தினத்து, மாலையில் சபரிமலையில் சேர்க்கப்படுகிறது. இங்கு நடக்கும் வரவேற்பு கொண்டாட்டமானது. திருவாபரணப் பெட்டிகளுடன் பதினெட்டு படிகள் கடந்து, இப்பெட்டிகளுக்கு பூஜைகள் முடிந்து, ஐயப்பனுக்கு அத்தனை நகைகளும் அணிவித்து, தீபாராதனை காட்டும் கணம் மகத்தானது. அதேநேரம் நடக்கும் மகரஜோதி தரிசனமும் மெய்சிலிர்க்கும் அனுபவமிக்கது.

(நாளையும் மலையேறுவோம்...)

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-09-2018

    21-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்