SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐயப்பன் அறிவோம்! சபரிமலை பயணம் - 35

2017-12-22@ 11:54:10

தேர்வாகும் தலைமை அர்ச்சகர்

இறையை பூஜிக்கிற அற்புதப் பணியான அர்ச்சகர் பணிக்கு சகலமும் அறிந்த, அறிவில் தேர்ந்தவரையே தேர்ந்தெடுப்பது அவசியம். இவ்வகையில், சபரிமலையில் ஐயப்பனை பூஜிக்கிற இம்மகத்தான தலைமைப் பணியில் இருப்பவரை ‘மேல்சாந்தி’ என்கின்றனர். ஒரே தலைமை அர்ச்சகர் ஒருபோதும் இருப்பதில்லை. ஆண்டுக்கு ஆண்டு ஐயப்பனே இவரை தேர்ந்தெடுத்துத் தரும் நிகழ்வாக குலுக்கல் நடத்தப்படும். இதற்காக பத்திரிகைகளில் தேசவம் போர்டு அறிவிப்பும் வெளியிடுகிறது. இதன்படி, வேத, மந்திர, தந்திர பேரறிவு பெற்றவர்கள் விண்ணப்பிக்கின்றனர். இவர்களை ஆய்வு நடத்தி, தகுதிப் பட்டியலை தேவசம் போர்டு தயாரிக்கிறது. இப்பட்டியலில் இருப்போரில் ஒருவரையே ஐயப்பன் தேர்வு செய்வதாக இந்த குலுக்கல் நடத்தப்படுகிறது.

பழங்காலத்து ‘குடவோலை’ முறை போலவே, இரு குடங்கள் கொண்டு வரப்படுகின்றன. தேர்வானோரின் பெயர்கள் தனித்தனியாக எழுதப்பட்டு ஒரு குடத்திற்குள் போடப்படுகிறது. அதே எண்ணிக்கையிலான வெள்ளைத் தாளில், அத்தனையையும் வெற்றுத்தாளாக சுருட்டிப்போட்டு, ஒரே ஒரு சீட்டில் மட்டும் மேல்சாந்தி என்றெழுதி மற்றொரு குடத்தில் போடப்படுகிறது. இந்த இரு குடங்களும் சுவாமி ஐயப்பன் முன்னிலையில் வைத்து பூஜிக்கப்படுகிறது. பிறகு ஒரு குழந்தை மூலம் ஒவ்வொரு குடத்திலும் தலா ஒரு சீட்டு என இரு சீட்டுகள் எடுக்கப்பட்டு ஒப்பிடப்படும்.

‘மேல்சாந்தி’ சீட்டுடன், எவரது பெயர் தாங்கிய சீட்டு சேர்ந்து வருகிறதோ, அவர்தான் அந்த ஆண்டுக்கான சபரிமலையின் தலைமை அர்ச்சகர் ஆகிறார்.
 மண்டல பூஜைக்கும் முன்னதாகவே அவர் மேல்சாந்தி பொறுப்பேற்று, அத்தனை முக்கிய பூஜைகளிலும் பங்கேற்கிறார். தேர்வு செய்யப்பட்ட நாளில் இருந்து, ஆண்டு முழுக்க இவர் தன் வீடு செல்லாமல், பூஜை காரியங்களிலேயே ஈடுபடுகிறார். நடை அடைக்கும் காலத்தில் இவர், கேரளத்து வேறு பகுதி ஐயப்பன் கோயிலில் தங்கிக் கொள்கிறார்.

(நாளையும் மலையேறுவோம்...)

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்