SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அன்னவாசல் அருகே முகைதீன் ஆண்டவர் தர்கா கந்தூரி விழா கொடியேற்றம்

2017-12-21@ 11:00:31

இலுப்பூர்: அன்னவாசல்  அருகே உள்ள முகைதீன் ஆண்டவர் தர்காவில் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டியில் மலைமேல் முகைதீன் ஆண்டவர் தர்கா உள்ளது. இங்கு ஆண்டு தோறும் கந்தூரி விழா சிறப்பாக நடைபெறும். இதன்படி இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது.

கொடியேற்ற விழாவிற்கு ஜாமியா பள்ளி வாசல் முத்தவல்லி ஹாஜூமுகமது அப்துல்லா தலைமை வகித்தார். பின்னர் துஆ ஓதப்பட்டு தக்பீர் முழக்கத்துடன் கொடியேற்றப்பட்டது. அடுத்ததாக யாசின் ஓதி துவா செய்து  இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் முக்கண்ணாமலைப்பட்டி மற்றும் அன்னவாசல் சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-04-2018

    23-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்