SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஐயப்பன் அறிவோம்! சபரிமலை பயணம் - 34

2017-12-21@ 10:59:55

சபரிமலையின் சேவா சங்கம்....

பழங்காலத்தில் எரிமேலியிலிருந்து அடர்ந்த காடு தாண்டி உணவு, குடிநீர், மருத்துவமின்றி சபரிமலை சேரும் பக்தர்களின் துயர் அதிகம். அன்று பம்பையில் 10 வயது சிறுவன் திடீரென மயங்கிட, அங்கிருந்த டாக்டர் வேலாயுதம் சிகிச்சையில் உயிர் காத்தார். இதனால் வேலாயுதத்தின் முயற்சியில் 1945 ஜன. 15ல் ‘ஐயப்ப சேவா சங்கம்’ பிறந்தது. திருவனந்தபுரத்தை மையமாக்கி ‘அகில பாரத ஐயப்ப சேவா சங்க’மானது. வெறும் 12 உறுப்பினர்களுடன் துவங்கி, இன்றைக்கு 3 மாநிலங்களில் 4 ஆயிரத்து 315க்கும் மேற்பட்ட கிளைகளுடன்,  8 ஆயிரத்து 625க்கும் மேற்பட்ட ஆயுட்கால உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

‘மகரஜோதி’ தினத்தில் ஐயப்பனுக்கான ஆபரணத்தை சரங்குத்தியிலிருந்து வரவேற்று 18 படிகளில் பின்தொடர்வதும், ‘ஆராட்டு விழா’ தினத்தில் பம்பையில் ஸ்ரீஐயப்ப விக்ரகத்தை வெண்ணிற சீருடையில் வரவேற்பதும் இவர்களே. தமிழ்மாநிலப்பிரிவு 1985 ஜூலை 14ல் மதுரை காந்திமியூசியத்தில் துவக்கப்பட்டது. தேசியச் சங்கத்தின் வெள்ளிவிழாவும் 2009 ஜூலை 26ல் மதுரையில்தான் நடந்தது. மலையேறும் பக்தர்களுக்கு மருத்துவம், அன்னதானம், குடிநீர், வழிகாட்டுதல் என 3 ஆயிரம் பேர் ‘சுழற்சி’ சேவை தொடர்கின்றனர்.

பம்பை, நீலிமலை, அப்பாச்சிமேடு, மரக்கூட்டம், சரங்குத்தி, சன்னிதானம் என ‘அவசரப்பிரிவு’ 24 மணிநேரமும் ஸ்ட்ரெட்சருடன் தயார் நிலையில் நின்றபடி, சேவை தருகின்றனர். இறப்போர் உடலை சொந்த ஊருக்கும் கொண்டு சேர்க்கின்றனர். சன்னிதானம், பெரியானை வட்டத்தில் மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ்களும் இருக்கின்றன. வீரபாண்டி துவங்கி எரிமேலி, அழுதை, கரிமலை, பம்பை, சன்னிதானம் முதல் திருச்சூர் வரை 21 இடங்களில் அன்னதானத்துடன் சேவை தருகின்றனர். நிலக்கல்லில் இலவச வாகன பராமரிப்பு மையமும், எரிமேலி, பம்பை, சன்னிதானத்தில் துப்புரவு பணிகளும் நடக்கிறது.

(நாளையும் மலையேறுவோம்...)

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்