SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் கந்தூரி விழா கொடியேற்றம்

2017-12-20@ 12:07:10

கடையம்: பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள பிரசித்திப்பெற்ற பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் கந்தூரி விழா நேற்று தொடங்கியது. மதியம் 2 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானை மீது கீழுர் ஜமாஅத்திலிருந்து நிறைபிறைக் கொடி மேளதாளம் வாணவேடிக்கை முழங்க ஊர்வலமாக முக்கிய வீதி வழியாக எடுத்து வரப்பட்டது. மாலையில் பள்ளிவாசல் வடபுறம் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

இதில் நெல்லை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த முஸ்லிம்கள் மற்றும் பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து வருகிற 28ம் தேதி இரவு 8மணிக்கு பச்சைக்களை ஊர்வலம் நடக்கிறது. 29ம் தேதி காலை 10 மணிக்கு அரண்மனை கொடிஊர்வலம் மற்றும் கொடியேற்றம் நடைபெறுகிறது. மதியம் 2 மணிக்கு மேலூர் ஜமாஅத் 10ம் இரவு கொடி ஊர்வலம் மற்றும் கொடியேற்றம் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானை முன் செல்ல மேளதாளத்துடன் ரவணசமுத்திரத்தில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் தொடங்குகிறது.

டிச.30ம் தேதி காலை 5 மணிக்கு பள்ளிவாசல் வந்து சேர்ந்தவுடன் சுவாமி கம் முத்தவல்லி. பரம்பரை தர்மகர்த்தா எஸ்.பி.ஷா மூலஸ்தானத்தில் வந்து சந்தனம் மெழுகுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு தீப அலங்காரத் திடலில் தீப அலங்கார நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஜன.1ம் தேதி 14ம் இரவு ராத்திபு ஓதுதல் நடைபெறும். விழா ஏற்பாடுகளை முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் நிர்வாக கமிட்டித் தலைவர் எஸ்.பி.ஷா தலைமையில் கமிட்டி உறுப்பினர்கள் வக்கீல்கள் முகம்மது ரபி, முகம்மது சலீம் மற்றும் மேலாளர் கனியப்பா, துணை மேலாளார் செல்லப்பா, கணக்கர் தங்கவேலு மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர். கந்தூரி விழாவை முன்னிட்டு திருநெல்வேலி மற்றும் தென்காசியில் இருந்து அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்