SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐயப்பன் அறிவோம்! சபரிமலை பயணம் - 33

2017-12-20@ 12:06:33

‘கல்லிடும் குன்றி’ன் கதை

மாலை அணிந்து, விரதமேற்று பயணிக்கிற இந்த சபரிமலைப் பயணத்தில், ஒவ்வொருவரும் ஒருவித ஆன்மிக அனுபவத்தை உணர்கின்றனர். இத்துடன், பக்தர்கள் ஒவ்வொருவரது செய்கைக்குள்ளும், ஒரு தத்துவம் ஒளிந்து கிடக்கிறது. இவ்வகையில் அழுதா நதியில் நீராடும் பக்தர், அங்கு மூழ்கி எடுக்கிற கற்களை, கல் இடும் குன்றில் இட்டு வணங்குவதும் ஒரு நிகழ்வாக தொடர்கிறது. இந்த கல்லிடும் குன்றுக்கு ஒரு பழங்கதையும் பேசப்படுகிறது. தேவர்களுக்கு மிகப்பெரும் துயர் கொடுத்து வந்த மகிஷியை, ஐயப்பன் வதம் செய்தார். அப்போது, இக்காட்சியைக் காண முப்பத்து கோடி தேவர்களும் அழுதா நதிக்கரையில் திரண்டிருந்தனர். மகிஷியை ஐயப்பன் வதம் செய்தபோது, துளி ரத்தமும் வெளியில் வராது தனது பாதத்தில் மகிஷியை அமுக்கிக் கொன்று, சரீரத்தை தன் கால்களால் தூக்கி எறிந்தார். அத்தருணம் தேவர்கள் மலர்மாரி பொழிந்து ஐயப்பனை துதித்தனர்.

காளை வாகனத்தில் வந்திருந்த சிவபெருமானுடன், பார்வதியும் இந்த வதம் கண்டு, ஐயப்பனை ஆசீர்வதித்தனர். இங்கு இன்றுள்ள ‘காளைகட்டி நிலைய’மே சிவபெருமான் வந்து நின்ற பகுதியாக இருக்கிறது. இப்பகுதியில் சிவன், பார்வதிக்கு கோயில் இருக்கிறது. வதம் செய்திட்ட பொழுதில், பிரம்மஹத்தி தோஷம் நீங்க வேண்டி தேவர்கள் அழுதா நதியில் இறங்கி நீராடினர். அப்போது ஐயப்பனால் தூக்கி எறியப்பட்ட மகிஷியின் பூத உடல் சிறுக சிறுக குன்று போல் வான் முட்ட வளர்ந்ததாம். இதைக் கண்ட தேவர்கள் ஒவ்வொருவரும் நீராடியபடி நதிக்குள் கிடந்த கற்களை மகிஷியின் உடல் மீது வீசி, அவ்வுடல் மேலும் வளராது மூடினர். அவ்விடமே ‘கல் இடும் குன்று’ ஆனதென்கின்றனர். இதனாலேயே ஐயப்ப பக்தர்களால், இந்த ஆசாரம் இன்றும் கடைபிடிக்கப்படுகிறது. இங்கு ‘கல் இடாத காலம்’ ஒன்று வந்தால், மகிஷியின் ஜடம் உயர்ந்து வருமென்கிற நம்பிக்கையும் இருக்கிறது.

(நாளையும் மலையேறுவோம்...)

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • bombblastcolombia

  கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

 • chinafiredrone

  மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

 • horse_apain12

  விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

 • 18-01-2019

  18-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • rivermoon

  வடகிழக்கு அமெரிக்காவில் நிலவின் மேற்பரப்பை போல உறைந்து காணப்படும் ஆற்றின் நடுப்பகுதி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்