SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்தியான உற்சவம் தொடங்கியது

2017-12-20@ 12:01:08

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி 25 நாட்கள் அத்தியான உற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி, இந்தாண்டு வருகிற 29ம் தேதி வைகுண்ட ஏகாதசியாகும். இதையொட்டி வைகுண்ட ஏகாதசிக்கு முன்னதாக வரும் 11 நாட்கள் பகல் பத்து எனவும், ஏகாதசிக்கு அடுத்தாக வரும் 10 நாட்கள் ராபத்து 10 எனவும் கணக்கிடப்பட்டு, அத்தியான உற்சவம் நடைபெறுகிறது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு கோயிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி எழுந்தருளினர்.

தொடர்ந்து ஜீயர்கள் மற்றும் ஏகாங்கிகள் ஆழ்வார்கள் எழுதிய நான்காயிர திவ்ய பிரபந்தத்தை படித்தனர். இதேபோல், அத்தியான உற்சவம் நிறைவு பெறும் நாள் வரை தினந்தோறும் நாலாயிர திவ்ய பிரபந்தம் படிக்கப்பட உள்ளது. தொடர்ந்து, 22, 23ம் தேதிகளில் சிறப்பு பூஜையுடன் 24ம் தேதி வராக சுவாமி சாத்துமுறையும், 25ம் தேதி தேநீர் அமுதமுடன் அத்தியான உற்சவம் நிறைவு பெறுகிறது. மேலும், இந்த உற்சவம் நிறைவு பெறும்வரை ரங்கநாதர் மண்டபத்தில் பெரிய சேஷ வாகனத்திலேயே ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி கொலு வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்