SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சனிப்பெயர்ச்சி கோவில்பட்டியில் மகா ஹோமம்

2017-12-18@ 11:28:01

கோவில்பட்டி: சனிப்பெயர்ச்சியை முன்னிட்டும், உலக நன்மைக்காகவும் கோவில்பட்டியில்  ஸ்ரீசத்குரு ஞானபீடம் சார்பில் மகா ஹோமம் நடந்தது.
இதையொட்டி கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் எதிரேயுள்ள காய்த்ரி  வித்யாலயா மண்டபத்தில் காலை 11 மணிக்கு மங்கள இசை, அனுக்ஞை, விக்னேஷ்வர  பூஜை, மகாசங்கல்பம், புண்ணியாகவாஜனம், கும்ப பூஜை, சூக்தாதி பாராயணம் நடந்தது. தொடர்ந்து மதியம் 1 மணிக்கு சனிஸ்வர பகவான் மூல மந்த்ர  ஹோமம், நவக்கிரக ஹோமம் நடந்தது. பூர்ணாஹூதி தீபாராதனைக்கு பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நெல்லை டவுன் தெற்கு மடாதிபதி வித்யாசங்கர சிவாச்சாரியார்  முன்னிலையில் கணேஷ் சர்மா மகா ஹோமம் மற்றும் சிறப்பு பூஜை நடத்தினார்.  இதில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை  கோவில்பட்டி ஸ்ரீசத்குரு ஞானபீடம் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 12-12-2018

    12-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramnathgovind

    மியான்மரில் அதிபர் ஆங் சான் சூகியுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

  • GuangxiZhuangcele

    தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • chinaexpo

    சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

  • londonbrexit

    சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்