SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் இரு தங்கத்தேர் பவனி

2017-12-18@ 11:24:23

கன்னியாகுமரி:  கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தின் 10 ம் நாள் திருவிழாவை முன்னிட்டு நேற்று இரு தங்கத்தேர் பவனி நடைபெற்றது. இத்திருத்தலத்தில் 10 நாள் திருவிழா கடந்த 8 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. விழா நாட்களில் பழைய ஆலயத்தில் திருப்பலி, திருஇருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனை, திருப்பலி, ஜெபமாலை, கலை நிகழ்ச்சிகள் ஆகியன நடைபெற்று வந்தது. 9 ம் நாள் திருவிழாவான நேற்றுமுன்தினம் இரவு 9 மணிக்கு புனித சூசையப்பர் தங்கத் தேர்ப்பவனி நடைபெற்றது. 10 ம் நாள் திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 4.30 மணிக்கு தங்கத்தேர் திருப்பலி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை வகித்து மறையுரை வழங்கினார்.

காலை 6 மணிக்கு நடைபெற்ற பெருவிழா நிறைவு திருப்பலிக்கு மறைமாவட்ட குருகுல முதல்வர் அருள்பணி கிலாரியுஸ் தலைமை வகித்தார். பிஷப் ரெமிஜியூஸ் ஆங்கிலப்பள்ளி தாளாளர் அருள்பணி ஸ்டான்லி மறையுரை வழங்கினார். காலை 8 மணிக்கு நடைபெற்ற ஆங்கிலத் திருப்பலிக்கு கன்னியாகுமரி காசா கிளாரட் சபை அருள்பணி ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். அருள்பணி டன்ஸ்டன் மறையுரை வழங்கினார். காலை 9 மணிக்கு இரு தங்கத் தேர்ப்பவனி நடைபெற்றது. தேரோடும் வீதிகளில் திரளான மக்கள் திரண்டுநின்று மாதாவுக்கு காணிக்கை செலுத்தினர்.

காலை 10.30 மணிக்கு நடைபெற்ற மலையாள திருப்பலிக்கு கன்னியாகுமரி புனித கலாசன்ஸ் பள்ளி முதல்வர் அருள்பணி ஸ்டாலின் தலைமை வகித்தார். கலாசன்ஸ் பள்ளி அதிபர் அருள்பணி சுனில் மறையுரை வழங்கினார். பிற்பகல் 12 மணிக்கு தமிழில் திருப்பலி நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு திருக்கொடியிறக்கம், நற்கருணை ஆசிர், இரவு 9 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை ஜோசப் ரொமால்டு, பங்கு மக்கள், பங்குப் பேரவை துணை தலைவர் லியோன், செயலாளர் பிரபா பெர்னாண்டோ, பொருளாளர் மரியஜான், இணை செயலாளர் கசின்ராய் மற்றும் அருள் சகோதரிகள், பங்கு அருள்பணியாளர்கள் செய்திருந்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-01-2018

    21-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Hungarystudentsstruggle

    ஹங்கேரியில் கல்வி தரத்தை உயர்த்த கோரி ஆயிரக்கணக்கணக்கான மாணவர்கள் போராட்டம்

  • colambiaparaglidingworldcup

    கொலம்பியாவில் உலகக் கோப்பை பாராகிளைடிங் போட்டி: பல்வேறு பகுதியிலிருந்து வீரர்கள் உற்சாகமாக பங்கேற்பு

  • turkey_dust_storm

    துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் வீசிய புழுதிப் புயல்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • republic_vilaaa

    குடியரசு தின விழா : வண்ணமயமான ஒளியில் மின்னும் ராஷ்திரபதி பவன்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்