SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐயப்பன் அறிவோம்! சபரிமலை பயணம் - 31

2017-12-18@ 11:23:31

ஆனந்தமிக்க ‘பேட்டைத் துள்ளல்’

சபரிமலை செல்வதற்கான பெருவழிப்பாதை எருமேலியில் துவங்குகிறது. இதுவரை வாகனங்களில் வருவோர், இங்கிருந்து நடக்கின்றனர். புலிப்பால் எடுத்து வர இப்பகுதி வழியாகவே ஐயப்பன் காட்டுக்குள் சென்றாராம். எருமை முகம் கொண்ட மகிஷியின் வதம் நிகழ்ந்த இடமென்பதால் இத்தலத்துக்கு எருமைக்கொல்லி பெயராகி, இதுவே நாளடைவில் ‘எருமேலி’யென மருவியதென்கின்றனர். கொடுமைகள் புரிந்த மகிஷி வதம் செய்யப்பட்டதறிந்த அப்பகுதியினர் ஆனந்தக் கூத்தாடினர். அதனை நினைவுறும் விதமாகவே ‘பேட்டைத் துள்ளல்’ நிகழ்ச்சி இங்கு கார்த்திகை, மார்கழி மாதங்களில் நடக்கிறது. சபரிமலை போகிறவர்கள் தங்கள் உடம்பில் பல வண்ணப்பொடிகளைப் பூசியபடி, அட்டையால் செய்த வாள், ஈட்டியை கையில் ஏந்திய நிலையில் எருமேலி சிறிய அம்பலம் கோட்டை சாஸ்தா கோயிலில் இருந்து, பெரிய அம்பலம் ஸ்ரீதர்மசாஸ்தா கோயிலுக்கு மேளதாள வாத்தியங்களுடன் நடனமாடியபடியே வருவர்.

பயணத்தின்போது ஐயப்பன் துணையாக வரவேண்டுமென வேண்டிக்கொண்டு கன்னிசாமிகள் கருப்பு கயிறு கட்டிக் கொள்வதுண்டு. சரம் எனும் சிறிய குச்சி ஒன்றையும் எடுத்துச் செல்வார்கள். பெரிய அம்பலம் சாஸ்தா கோயிலுக்கு வந்ததும் அங்குள்ள நதியில் நீராடுவர். பிறகு புறப்பட்டு, வாவரையும் சிறிய அம்பலம் கோட்டை சாஸ்தாவையும் தரிசித்து, பெருவழிப் பயணம் தொடங்குவர். மகரஜோதி தரிசனத்திற்கு 3 நாட்கள் முன்னதாக நடக்கும் அம்பலப்புழா மற்றும் ஆலங்காடு குழுவினரின் பேட்டைத்துள்ளல் வெகு விமரிசையாக நடக்கும். ஐயப்பன் தன் அவதாரத்தின் போது படைகளுடன் ஆடியபடி காட்டுக்குள் சென்றார். அதை நினைவுபடுத்தவே 'சாமி திந்தக்கத்தோம்.... அய்யப்ப திந்தக்கத்தோம்...’’ என்றபடி இப்பேட்டைத் துள்ளல் குதூகலத்துடன் நடத்தப்படுகிறது.

நாளையும் மலையேறுவோம்...

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-11-2018

  18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-11-2018

  17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 3rdthiruvanamalai

  திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

 • pudukottaikaja

  கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

 • NagaiGajaStorm

  நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்