SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக மக்கள் நலனுக்காக திருநள்ளாறு கோயிலில் நவகிரக சாந்தி ஹோமம்

2017-12-16@ 12:36:48

காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாற்றில் வரும் 19ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுவதை யொட்டி கலெக்டர் கேசவன் தலைமையில், கோயில் நிர்வாக அதிகாரியும் சப்கலெக்டருமான விக்ரந்த்ராஜா பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறார். மேலும், உலக மக்கள் நன்மைக்காகவும், பக்தர்களுக்கு சனீஸ்வர பகவானின் முழுமையான நன்மை பலன் கிடைக்க வேண்டியும் சிறப்பு நவகிரக சாந்தி ஹோமம் நேற்று முன்தினம் சனீஸ்வர பகவான் சன்னிதி அருகே சிறப்பு யாக சாலையில் நடைபெற்றது.

இதில், 120 வகையான மூலிகை, பழவகைகள், நவதானியங்கள் கொண்டு மகா ஹோமம் நடத்தப்பட்டது. கோயில் சிவாச்சாரியார்கள் மூலமந்திர ஜெப ஹோமங்கள் செய்தனர். தொடர்ந்து, சனீஸ்வர பகவானுக்கு உகந்த கரு நீலப்பட்டு கொண்டு மகா பூர்ணாஹூதி செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
பிறகு, யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கலச நீரைக் கொண்டு தர்பாரண்யேசுவரர், பிரணாம்பிகை மற்றும் சனீஸ்வர பகவானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி விக்ரந்த்ராஜா, கோயில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-01-2018

    18-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • indhiya_japann11

    இந்தியா - ஜப்பான் கடலோர காவல் படை இணைந்து நடத்திய கூட்டுப்பயிற்சி !!

  • raanuvapayirchii11

    70வது ராணுவ தினம் : பல்வேறு சாகச பயிற்சிகளில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்

  • prime_ashram11

    சபர்மதி ஆசிரமத்தில் இருந்த ராட்டையை சுழற்றிய இஸ்ரேல் பிரதமர் : பட்டம் பறக்கவிட கற்றுக் கொடுத்த மோடி

  • indhiya_isreal11

    தீவிரவாத தாக்குதலில் பெற்றோரை இழந்த இஸ்ரேல் சிறுவன் மோஷே 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வருகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்