SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆற்றங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா : 16ம் தேதி கொடியேற்றம்

2017-12-13@ 11:01:34

ராதாபுரம்: புகழ்பெற்ற இஸ்லாமிய திருத்தலங்களுள் ஒன்று ஆற்றங்கரை ஹசரத் சேகு முகம்மது(ஒலி) , ஹசரத் சையதலி பாத்திமா(ரலி) தர்கா ஆகும். ராதாபுரம் அருகே நம்பியாறு இந்துமகா சமுத்திரத்தோடு கலக்கும் கழிமுக பகுதியான ஆற்றங்கரை பள்ளிவாசல் என்ற இடத்தில் இந்த தர்ஹா அமைந்துள்ளது. வாரந்தோறும் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குமரி மற்றும் கேரள பகுதிகளில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த தர்ஹாவில் ஒவ்வொரு ஆண்டும் கந்தூரி விழா சிறப்பாக நடைபெறும். இந்தாண்டுக்கான கந்தூரி விழா வருகிற 16ம் தேதி தொடங்குகிறது. அன்று அதிகாலை 5.30 மணிக்கு கத்முல் குர்ஆன் ஓதுதல், 7 மணிக்கு குர்ஆன் தமாம், 8 மணிக்கு அரண்மனை புலிமான் குளத்தில் இருந்து யானை மீது கொடி ஊர்வலம், சந்தனக்குடம் தர்காவுக்கு கொண்டு வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.

காலை 9 மணிக்கு கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 10 மணிக்கு சந்தனம் மெழுகுதல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 3.30 மணி முதல் 5.30 மணி வரை மவ்லூது ஷரீப் ஓதுதல், மாலை 5.30 மணி முதல் 7 மணி வரை ராத்திப்புத்துல் காதிரிய்யா திக்ரு மஜ்லீஸ் நடக்கிறது. இரவு 7 மணிக்கு ஹதீஸ் ஆரம்பித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 12 மணிக்கு இஸ்லாமிய இன்னிசை கச்சேரி நடக்கிறது. மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு நன்றி நவிலல் நிகழ்ச்சியும், 5.45 மணிக்கு சிறப்பு துவா ஓதுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. காலை 6 மணிககு நயாஸ் அஹ்மத் பிஜிலி, ஹபிபுர் ரஹ்மான் பிஜிலி ஆகியோர் தலைமையில் நேர்ச்சை விநியோகம் செய்தல் நடக்கிறது. விழாவையொட்டி பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்து வசதிகள், தங்குமிடம், பாதுகாப்பு வசதிகள்  செய்யப்பட்டுள்ளன. கந்தூரி விழா ஏற்பாடுகளை ஆற்றங்கரை பள்ளிவாசல் பரம்பரை டிரஸ்டிகள் நயாஸ் அஹ்மத் பிஜிலி, ஹபிபுர் ரஹ்மான் பிஜிலி ஆகியோர் செய்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-01-2018

    24-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonSuperMarket

    பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

  • ManholeCoverJapan

    பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

  • PhilippineValcanoErruption

    பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்