SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உமது பெயரையே உச்சரிப்பேன்

2017-12-07@ 13:50:15

நீங்கள் எண்ணத்தை விதைத்து செயலை அறுவடை செய்கின்றீர்கள்; செயலை விதைத்து பழக்கத்தை அறுவடை செய்கின்றீர்கள்; பழக்கத்தை விதைத்து ஒழுக்கத்தை அறுவடை செய்கின்றீர்கள்; ஒழுக்கத்தை விதைத்து உங்கள் தலைவிதியை நிர்ணயித்துக் கொள்கின்றீர்கள்; உங்கள் மனதை உங்கள் நண்பனாக ஆக்கிக்கொண்டால் அனைவரையும் நீங்கள் நண்பராக்கிக் கொள்ள முடியும். சரியான வழிமுறையின்றி மனதை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது.
மூன்று பேர் பரலோகத்தைக் காணும் ஆசையில் அதன் வாசலருகே நின்றார்கள். அங்கே நின்ற தேவதூதன் இரவு நீண்ட நேரமாகி விட்டது. ஆகவே, நீங்கள் வெளியே படுத்திருங்கள். காலையில் பார்க்கலாம் என்றார். அதிகாலையில் ஒருவர் எழுந்தார். அங்கிருந்த தேவதூதனிடம், நான் காலையிலே எழுந்ததும் முதலில் பெட்காபி குடிப்பேன், அருகில் எங்காவது நல்ல ஹோட்டல் இருக்குமா? என்று கேட்டார்.

மற்றவர் தேவதூதனிடம் நான் காலையில் எழுந்ததும் நியூஸ் பேப்பர் வாசிப்பேன். அதன்பின் டெலிவிஷன் முன்பாக அமர்ந்து தேசிய செய்திகளையும், உலகச்செய்திகளையும் கேட்பதுண்டு. இங்கே அதற்கு ஏதேனும் வசதி உண்டா? என்று கேட்டார். மூன்றாவது ஆளோ, ஐயா, நான் அதிகாலை எழுந்ததும், கடவுளுடைய பொன் முகத்தையே பார்ப்பேன். காலைதோறும் அவருடைய கிருபை புதியது அல்லவா? இந்த நாள் முழுவதும் வெற்றிகரமாக வாழ்வதற்கு கடவுளுடைய கிருபையான உதவியை நாடுவேன். கடவுளைப் பார்க்க முடியுமா? என்று கேட்டார். இவரது விண்ணப்பம் ஏற்கப்பட்டு பரலோக வாசல்கள் இவருக்குத் திறக்கப்பட்டன. ‘‘கடவுளே, நீரே என் இறைவன். உம்மையே நான் நாடுகின்றேன்.

என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது. நீரின்றி வறண்ட தரிசு நிலம்போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது. உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்கி நின்றேன். ஏனெனில் உமது பேரன்பு உயிரினும் மேலானது. என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன. என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன். கைகூப்பி உமது பெயரை உச்சரிப்பேன். அறுசுவை விருந்தில் நிறைவடைவதுபோல என் உயிர் நிறைவடையும். என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும். நான் படுத்திருக்கையில் உம்மை நினைப்பேன். இராவிழிப்புகளில் உம்மைப் பற்றியே ஆழ்ந்து சிந்திப்பேன். ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர். உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன்.

நான் உம்மை உறுதியாகப் பற்றிக்கொண்டேன். உமது வலக்கை என்னை இறுகப்பிடித்துள்ளது. என்னை அழித்துவிடத் தேடுவோர் பூவுலகின் ஆழத்திற்குள் செல்வர்.’’  (திருப்பாடல்கள் 63:19) நீங்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றீர்கள்? வாழ்க்கையில் நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அவருடைய வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அவர் தரும் பாவ மன்னிப்பிற்கும் இரட்சிப்பிற்கும் முக்கியத்துவம் கொடுங்கள். மற்றவைகளெல்லாம் உங்களை விட்டு எடுக்கப்பட்டுப் போனாலும் கிறிஸ்து இயேசுவின் நல்ல பங்கை அவர் தருகின்ற இரட்சிப்பை எவரும் ஒருபோதும் உங்களை விட்டு எடுப்பதில்லை.
 
‘‘மணவைப்பிரியன்’’ ஜெயதாஸ் பெர்னாண்டோ

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-12-2017

  15-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

 • Ragul_Fishermen

  ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி, கேரளா மீனவர்களின் குடும்பத்தினருடன் ராகுல் காந்தி சந்திப்பு

 • AnubutiShatabditrain

  விமானம் போன்ற சொகுசு வசதிகளுடன் கூடிய அனுபூதி பெட்டி: சதாப்தி ரயில்களில் இயக்க ரயில்வே திட்டம்

 • JamaMasjid_Crack

  361 ஆண்டுகள் பழமையான ஜமா மசூதியில் விரிசல்: விரைவில் சீரமைக்க ஆர்வலர்கள் கோரிக்கை

 • PeriyaPandian_Homage

  காவல் ஆய்வாளர் பெரியபாண்டி உடல் சென்னை வந்தடைந்தது: கறுப்புப்பட்டை அணிந்து தலைவர்கள், அதிகாரிகள் இறுதி அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்