SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பஞ்சம் பசி போக்குவாய் அன்னபூரணி

2017-12-07@ 12:31:42

அன்னம் - அன்னை - அன்னபூரணி

தமிழின் முதல் எழுத்தான ‘‘அ’’கரமும் இறுதி எழுத்தான ‘‘ன்’’ என்ற எழுத்தும் சேர்ந்து உருவானது ‘‘அன்’’ என்ற வேர்ச் சொல்லாகும். இந்த வேர்ச் சொல்லில் இருந்து பல சொற்கள் கிளைத்து எழுந்துள்ளன. அவற்றுள் முதன்மை பெற்றவை அன்னை, அன்னம் என்பனவாகும். ‘‘அன்’’ என்ற அந்த வேர்ச்சொல்லானது வழியாக இருப்பது மனநிறைவைத் தருவது, மேலானது, உயர்ந்தது மேன்மைமிக்கது போன்ற பல பொருகளைக் கொண்டது. ‘‘அன்’’ என்ற வேர்ச்சொல்லுடன் ‘‘ஐ’’ என்ற சிறப்பு எழுத்து சேர்ந்து அன்னை என்னும் சொல் உருவானது. நமக்கு அறிவையும் உணவையும் ஊட்டுபவளும், இந்த உலகிற்கு நாம் வருவதற்கு வழியாக இருப்பவளும், நமக்கு மேலானவளுமாகிய தாய் அன்னை எனப்படுகிறாள். அன்னையால் நாம் வளரவும், வாழவும் இன்பங்களைத் தேடிப் பெறவும் ஊட்டப்படுவது அன்னமாகும்.

அது உடலை வளர்ப்பதோடு அதில் உறையும் உயிரையும் வளர்க்கிறது.‘‘அன்’’ என்ற சொல்லோடு ‘‘அம்’’ என்ற சொல் இணைந்து அன்னம் ஆகியது. அது சோற்றை (உணவை)க் குறிக்கிறது. நாம் நமது உடல் இயங்குவதற்கான சக்திகளைப் பெற வழியாக இருப்பதாலும், உயிரைக் காக்கும் மேலான பொருளாக இருப்பதாலும், உண்டபின் மனநிறைவைத் தருவதாலும் உணவு அன்னம் எனப்படுகிறது. உணவு உடலுக்குச் சக்தி தந்து உயிரைக் காப்பது. அதனால் ‘‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’’ என்றனர் பெரியோர்கள். அன்னம் என்ற சொல் சோற்றைக் குறிப்பதுடன், தூய வெண்ணிறம் கொண்ட பறவையையும் குறிக்கிறது. பறவைகளில் உயர்ந்ததாக அன்னம் இருக்கிறது. அதை அறிவு, ஞானம் ஆகியவற்றின் குறியீடாகக் கொள்வர். அதை இலக்கியங்கள் ஞானப்பறவை என்று போற்றுகின்றன. மனித குலம் வாழ்விற்குத் தேவையானவற்றைப் பெற அறிவு செயல்பட வேண்டியுள்ளது.

‘‘அறிவை அற்றம் காக்கும் கருவி’’ என்கிறார் திருவள்ளுவர். உலகிலுள்ள பொருட்களை அடைவதற்கு வழியாக இருப்பது அறிவாகும். அது கண்ணுக்குப் புலப்படாத ஆயுதம், அறிஞர்கள் அறிவே ஆயுதம் என்பர். அறிவானது உலகிலுள்ள பொருட்களை அடைந்து உயிரை இன்பமடையச் செய்வதால் அதனைக் குறிக்க, அன்னப்பறவையைக் கொண்டனர். அறிவுக் கடவுள் ஏறி வரும் வாகனமாக அன்னம் இருக்கிறது. உடலுக்கும் உயிருக்கும் தேவையான சக்திகளைப் பெற உணவைத் தந்து அதன் மூலம் மன மகிழ்ச்சியை அருளும் தேவியாக இருப்பவள் அன்னை பராசக்தி. அவள் உயிர்களுக்கு உணவைத் தந்து காத்தருள மேற்கொண்ட கோலமே அன்னபூரணியாகும். தேவையான உணவை உண்ட உடல் புத்துணர்ச்சி பெறும்போது உயிர் நிறைவை அடைகிறது. உணவால் பெறப்படும் அந்த பூரணத்தை (நிறைவை) அருளும் அன்னை அன்னபூரணியாவாள். அவளை அன்ன வாகனத்தில் பவனி வருபவளாகச் சித்தரிக்கின்றனர். உடல் வளர உணவையும், அதற்குள் இருக்கும் உயிர் வளர்ந்து மேன்மை பெறவும் அருளும் அன்னபூரணியை இங்கு அன்ன வாகனத்தில் கண்டு மகிழ்கிறோம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi_well_fare

    மோடியின் மிசோரம், மேகாலயா பயணம்: பல்வேறு நலத்திட்ட பணிகள் தொடங்கி வைப்பு

  • delhiamarsolidiers

    இந்தியா-பாகிஸ்தான் போரின் 46வது வெற்றி தினத்தையொட்டி அமர் ஜவான் ஜோதியில் ராணுவ வீரர்கள் மரியாதை

  • RahulGandhitakecharge

    காங்கிரஸ் தலைவரானார் ராகுல்காந்தி: தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாட்டம்

  • panipolivu_11

    வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு :வாட்டி வதைக்கும் குளிரை தணிக்க தீமூட்டி குளிர்காயும் மக்கள்

  • INdonesia_EarthquAke

    இந்தோனேஷியாவின் ஜாவா திவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கட்டிடங்கள் சேதம், 2 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்