SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆதித்திருத்தளிநாதர் கோயிலில் 108 சங்காபிஷேக வழிபாடு

2017-12-05@ 14:20:28

திருப்புத்தூர்: திருப்புத்தூர் ஆதிதிருத்தளிநாதர் ஆலயத்தில் சோமவார திங்களை முன்னிட்டு சங்காபிஷேக விழா நடைபெற்றது. குன்றக்குடி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோயில்களில் மிகப் பழமையானதும் தொன்மை வாய்ந்த கோயிலுமான மேலக்கோயில் என்று அழைக்கப்படும் ஆதித் திருத்தளிநாதர் கோயிலில் நேற்று சோமவார திங்களை முன்னிட்டு 108 சங்காபிஷேக விழா நடந்தது. மாலை நெல்லில் சங்குகள் அடுக்கப்பட்டு பால் மற்றும் சந்தனம், குங்குமம் இடப்பட்டு சுற்றிலும் நெய்தீபம் ஏற்றி சிவலிங்க வடிவத்தில் சிவாச்சாரியர்களால் சங்குகளுக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது.

தொடர்ந்து யாகவேள்வி நடைபெற்றது. மூலவரான சிவனுக்கு பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம், இளநீர், விபூதி, யாகத்தில் வைக்கப்பட்ட புனித கலசநீர் ஆகிய பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் மூலவர் காட்சியளித்தார். சோமவார திங்களை முன்னிட்டு கணேச குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேள்வி மற்றும் சிறப்பு பூஜையை நடத்தினர். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு நெய்விளக்கேற்றி வழிபட்டனர். ஏற்பாடுகளை தங்கமுத்து மீனாட்சி, நந்தகுமார் வரலெட்சுமி மற்றும் பிரதோஷ குழுவினர் செய்திருந்தனர். பக்த்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-10-2018

    24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்

  • FoamFightScotland

    முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

  • SALTMarchRashtrapti

    ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

  • NagoroJapanVillage

    ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

  • FallFoilageWorld

    உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்