SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பட்டாம்பி அருகே சுப்ரமணியர் சுவாமி கோயில் தேர் திருவிழா

2017-12-05@ 14:19:10

பாலக்காடு: பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி அருகேயுள்ள ஐயர்மலை சுப்ரமணியர் சுவாமி கோயிலில் கார்த்தீகை தீபா திருவிழாவில் நேற்று தேர் திருவிழா நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். கார்த்தீகை தீபத் திருவிழா கடந்த மூன்று நாட்களாக இக்கோயிலில் நடந்து வந்தது. நேற்று முன்தினம் மூலவர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று மாலை உற்சவமூர்த்தி சுப்ரமணியர் தேரில் ஏற்றப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியே ஊர்வலம் சென்றார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை இழுத்து தங்களது நேர்த்திகடன்களை செலுத்தினர். கோவிலின் சுற்றுப்பிரகாரத்தில் கடந்த மூன்று நாட்களும் பக்தர்கள் கார்த்தீகைத் தீபங்கள் ஏற்றி வழிப்பட்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-10-2018

    24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்

  • FoamFightScotland

    முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

  • SALTMarchRashtrapti

    ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

  • NagoroJapanVillage

    ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

  • FallFoilageWorld

    உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்