SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நடராஜர் கோயில் பொற்சபையை சுற்றி திரளான பக்தர்கள் வழிபாடு

2017-12-05@ 14:17:41

சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நேற்று கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு பக்தர்கள் பொற்சபையை சுற்றி வலம் வந்தனர். கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகள் சோமவாரமாக கருதப்படுகிறது. கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு பக்தர்கள் அதிகாலையிலேயே நீராடி தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற விரதமிருந்து நடராஜர் கோயிலில் சித்சபையை 108 முறை வலம் வருவது தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. ஏராளமான பெண்கள் சோமவாரம் விரதம் கடைபிடிப்பது வழக்கம். கார்த்திகை மாதத்தின் 3வது சோமவாரமான நேற்று அதிகாலை முதல் மாலை வரை ஆயிரக்கணக்கான பெண்கள் நடராஜர் சன்னதியையும், கொடி மரத்தையும் சுற்றி வலம் வந்தனர். இதேபோன்று கோயிலில் உள்ள ஸ்ரீஆதிமூலநாதர் சன்னதியையும் பக்தர்கள் வலம் வந்தனர்.  

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-10-2018

    24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்

  • FoamFightScotland

    முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

  • SALTMarchRashtrapti

    ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

  • NagoroJapanVillage

    ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

  • FallFoilageWorld

    உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்