SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓம்காளியம்மன் கோயிலில் தண்ணீரில் ஏற்றப்பட்ட தீபம்

2017-12-05@ 14:11:17

பள்ளிபாளையம்:கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, பள்ளிபாளையம் ஓம்காளியம்மன் கோயிலில், தண்ணீர் நிரப்பிய விளக்கில் தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு தரிசம் செய்தனர். நாமக்கல் மாவட்டம்  பள்ளிபாளையம் காவிரிக்கரையில், 24 மனை தெலுங்கு செட்டியார்கள் வழிபட்டு வரும் ஓம்காளியம்மன்  கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் தீபத்திருநாளன்று விளக்கில் தண்ணீரை நிரப்பி தீபம் ஏற்றப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு,  தண்ணீர் நிரப்பிய விளக்கில் தீபமேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கோயிலில் ஓம்காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கோயில்  குருக்கள் செந்தில்நாதன், தண்ணீர் நிரப்பிய விளக்கில் தீபமேற்றினார். சுடர்விட்ட எரிந்த தீபத்தை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-07-2018

    22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்