SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம்

2017-12-05@ 14:10:43

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா உற்சவம் கடந்த 23ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்ற இவ்விழாவின்போது தினமும் பகலில் விநாயகர், சந்திரசேகரரும், இரவில் பஞ்ச மூர்த்திகளும் மாடவீதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கடந்த 2ம் தேதி மகா தீப பெருவிழா நடந்தது. இவ்விழாவில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து சுமார் 25 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு தீப தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து, ஐயங்குளத்தில் மூன்று நாட்கள் தெப்பல் உற்சவம் நடைபெற்று வருகிறது. முதல்நாளான நேற்றுமுன்தினம் இரவு சந்திரசேகரர் தெப்பல் உற்சவமும், நேற்று இரவு பராசக்தியம்மன் தெப்பல் உற்சவமும் நடைபெற்றது.

இந்நிலையில், தீபத்திருவிழாவை முன்னிட்டு நேற்று உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் கிரிவலம் வந்தார். அண்ணாமலையாருடன், பராசக்தி அம்மன், துர்கையம்மனும் உடன் கிரிவலம் சென்றனர். அப்போது கிரிவலப்பாதையின் வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டு நின்று ஆரத்தி எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், அஷ்டலிங்க கோயில்களிலும், அடி அண்ணாமலை கோயிலிலும் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடந்தன. ஆண்டுதோறும் தை மாதத்தில் திருவூடல் திருவிழாவின்போதும், தீபத்திருவிழா முடிந்த பிறகும் அண்ணாமலையார் கிரிவலம் செல்வது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-10-2018

    24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்

  • FoamFightScotland

    முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

  • SALTMarchRashtrapti

    ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

  • NagoroJapanVillage

    ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

  • FallFoilageWorld

    உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்