SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவண்ணாமலை ஐயங்குளத்தில் 2ம் நாள் தெப்பல் உற்சவத்தில் பராசக்தி அம்மன் பவனி

2017-12-05@ 14:08:44

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவின் நிறைவாக, 2ம் நாள் தெப்பல் உற்சவம் நேற்று நடந்தது. பராசக்தி அம்மன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பவனி வந்து அருள்பாலித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடந்து முடிந்த கார்த்திகை தீபத்திருவிழா உற்சவத்தின் நிறைவாக, ஐயங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடந்து வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு சந்திரசேகரர் தெப்பலில் பவனி வந்தார்.
அதைத்தொடர்ந்து, 2ம் நாளான நேற்று இரவு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பராசக்தி அம்மன் ஐயங்குளத்தில் பவனி வந்து பத்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அப்போது, அங்கு திரண்டிருந்த ஏராளமான  தெப்பலில் பவனி வந்த அம்மனை தரிசனம் செய்தனர். முன்னதாக, இரவு 8 மணி அளவில், அண்ணாமலையார் கோயிலில் இருந்து மேளதாளம் முழங்க பராசக்தி அம்மன் புறப்பாடு நடைபெற்றது. தெப்பத்தை முன்னிட்டு, ஐயங்குளத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. குளத்துக்குள் பக்தர்கள் இறங்க அனுமதிக்கவில்லை. தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், மலைமீது ஏற்றப்பட்ட மகா தீபம், தொடர்ந்து 3வது நாளாக நேற்று காட்சியளித்தது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் நேற்றும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்திருந்தது. வரும் 12ம் தேதி வரை சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2017

    15-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • Ragul_Fishermen

    ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி, கேரளா மீனவர்களின் குடும்பத்தினருடன் ராகுல் காந்தி சந்திப்பு

  • AnubutiShatabditrain

    விமானம் போன்ற சொகுசு வசதிகளுடன் கூடிய அனுபூதி பெட்டி: சதாப்தி ரயில்களில் இயக்க ரயில்வே திட்டம்

  • JamaMasjid_Crack

    361 ஆண்டுகள் பழமையான ஜமா மசூதியில் விரிசல்: விரைவில் சீரமைக்க ஆர்வலர்கள் கோரிக்கை

  • PeriyaPandian_Homage

    காவல் ஆய்வாளர் பெரியபாண்டி உடல் சென்னை வந்தடைந்தது: கறுப்புப்பட்டை அணிந்து தலைவர்கள், அதிகாரிகள் இறுதி அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்