SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சக்கரதீர்த்த முக்கோட்டி நிகழ்ச்சி

2017-12-01@ 13:47:25

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சக்கரதீர்த்த முக்கோட்டி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ள திருமலையில் 66 கோடி தீர்த்தங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதில் முக்கிய தீர்த்தங்களில் ஒன்றாக சக்கரதீர்த்தம் கருதப்படுகிறது. சக்கரதீர்த்தத்தில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் சக்கரதீர்த்த முக்கோட்டி தேவஸ்தானம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு சக்கரதீர்த்த முக்கோட்டியையொட்டி ஏழுமலையான் கோயில் பின்புறம் உள்ள நாராயணகிரி மலையில் சக்கரதீர்த்தம் அருகே சக்கரத்தாழ்வார் நரசிம்மசுவாமி ஆஞ்சநேயருக்கு நாதஸ்வரங்கள் முழங்க சக்கரதீர்த்தத்திற்கு ஊர்வலமாக வந்து சிறப்பு பூஜைகள் நேற்று நடைபெற்றது. இதில் துணை செயல் அலுவலர் கோதண்டராம ராவ் மற்றும் அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sabarimala11

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

  • pothumakkal_siramam1

    வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு : பொதுமக்கள் கடும் சிரமம்

  • dubai_hospitalll11

    துபாயில் ஒட்டகத்திற்கு மட்டும் சிகிச்சை அளிக்கும் வினோத மருத்துவமனை

  • Astronauts

    சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள்

  • 15-12-2017

    15-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்