SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அஷ்டோபசார பூஜை வேண்டாம் என்கிறார் பாபா

2017-11-30@ 07:14:50

குரு பக்தியே சிறந்த சாதனம். வேறு எதுவும் தேவையில்லை. அதிகமாகப் புத்தகங்களைப் படிப்பதால் மோகமும், அகங்காரமும் வளர்கிறதேயன்றி ஆன்மீக வளர்ச்சி ஏற்படாது என்பது பாபாவின் கூற்று. கல்விச் செருக்கு எத்தனையோ பேர்களை பக்தியில்லாமலாக்கி விடுகிறது. ஆகவே குருபக்தி ஒன்றிருப்பின் மற்ற எல்லாம் தானே வந்து விடுகின்றன என்றார் பாபா. எனக்கு அஷ்டோபசார பூஜையோ ஷோடோபசார பூஜையோ வேண்டாம். எங்கு பக்தி பாவம் இருக்கிறதோ அங்கு நான் இருக்கிறேன். நம்பிக்கை உள்ள பக்தியால் மட்டுமே எனது அனுபவம் உங்களுக்கு கிடைக்கும். கேட்காமலேயே கிடைக்கும். எனது பக்தனுக்கு இது ஒரு அற்புதம். பாபா தனக்கு ஷோடோபசார பூஜை வேண்டாம் என்று கூறியிருக்கிறார். பக்தர்களின் மீதிருந்த அன்பினால் இதையே பாபா பலமுறைகள் திரும்பத் திரும்ப சொல்லியிருக்கிறார்.

16 பூஜை முறைகள்:

1. ஆவாஹனம் - தெய்வத்தை ஒரு விக்கிரஹத்திலோ, படத்திலோ எழுந்தருளும்படி வேண்டிக் கொள்ளுதல்.

2. ஆசனம்- தெய்வத்திற்கு ஓர் இருக்கை சமர்பித்தல்.

3. பாத்யம்- பாதங்களை அலம்பிக் கொள்வதற்குச் சுத்தநீர் சமர்பித்தல்

4. அர்க்கியம்- அக்ஷதை, அருகம்புல், மலர்கள் இவற்றுடன் நீர் சேர்த்து அல்லது வெறும் நீர் சமர்ப்பணம் செய்தல்.

5. ஆசமனம்- உள்ளங்கையில் நீரேந்தி மூன்றுமுறை குடிப்பதற்கு நீர் சமர்ப்பணம் செய்தல்.

6. ஸ்நானம்-குளிப்பதற்கு நீர் சமர்ப்பணம் செய்தல்.

7. வஸ்த்ரம்- உடுத்துக்கொள்வதர்க்கு உடை சமர்ப்பணம் செய்தல்.

8. யக்ஞோபவீதம்- பூணூல் அணிவித்தல்.

9. கந்தம்- அரைத்த சந்தனம் இடுதல்.

10. புஷ்பம்- மலர்களை சமர்பித்தல்.

11. தூபம்- சாம்பிராணிப் புகைச் சூழச் செய்தல்.

12. தீபம்- விளக்கை காட்டுதல்.

13. நைவேத்தியம்- உணவு மற்றும் குடிநீர் சமர்பித்தல்.

14. தக்ஷிணா - தக்ஷிணை சமர்பித்தல்.

15. பிரதக்ஷினம்  - வலம்  வருதல்.

16. மந்திர புஷ்பம்- வேதமந்திரங்களைக் கோஷித்தவாறு இரண்டு கைகளாலும் தெய்வத்தின்மேல் பூமாரி பொழிதல் . 

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-10-2018

    24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்

  • FoamFightScotland

    முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

  • SALTMarchRashtrapti

    ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

  • NagoroJapanVillage

    ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

  • FallFoilageWorld

    உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்