SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிருஷ்ணன்கோவில் ஆதிபராசக்தி சக்தி பீடத்தில் மதநல்லிணக்க வேள்வி பூஜை

2017-11-28@ 10:54:10

நாகர்கோவில்: நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் யாதவர் தெருவில் ஆதிபராசக்தி சக்திபீட கோயில் உள்ளது. இந்த கோயில் வருஷாபிஷேக விழாவினை முன்னிட்டு  மத நல்லிணக்கம் வளரவும், மனிதநேயம் தழைக்கவும், மழை வளம் பெருகவும், மண்வளம் செழிக்கவும் வேள்வி பூஜை நடந்தது. வேள்வியை குமரி மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி ஜாண் ஆர்.டி.சந்தோஷம் தொடங்கி வைத்தார். தக்கலை மறைமாவட்ட ஆயர் ஜார்ஜ் ராஜேந்திரன், வாழும் கலை சர்வதேச ஆசிரியர் மணிகண்டன், முஸ்லிம் வைதூல்மால் டிரஸ்டி தலைவர் இலியாஸ், வெள்ளிமலை ஆசிரம சுவாமி கருணானந்தஜி, குமரி மாவட்ட வள்ளலார் பேரவைத் தலைவர் சுவாமி பத்மேந்திரா, முன்னாள் எம்எல்ஏ வேலாயுதம் ஆகியோர் வேள்வி பூஜையில் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து தைப்பூச இருமுடி விரதத்தை தொடங்கும் சக்தி மாலை அணிதல் நிகழ்ச்சி நடந்தது. சக்தி மாலையை சக்திபீட தலைவர் சின்னதம்பி அணிவித்து விரதத்தை தொடங்கி வைத்தார். 63 ஏழைகளுக்கு ஆடைதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சக்திபீடத்தலைவர் சின்னத்தம்பி தலைமையில் துணைத்தலைவர் அருணாச்சலம், செயலாளர் சந்திரன், பொருளாளர் அசோக்குமார் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-10-2018

    23-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்